வலைப்பதிவாலர்களோடு என் தாக்கத்தை பகிர்து கொள்ள விரும்புகிறேன். வெயில் மழை,நோடிஸ் போடு பதிவுக்கு சென்றிருந்தேன். நோடிஸ் போடு கண்டதும் இளமை ஊஞ்சலாடியது,ஆனால் இறுதியாய் இரண்டில் முதல் போசும் நிழல்படத்தை கண்டதும் எனக்கேற்பட்ட தாக்கம் புதிதல்ல, சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு,என் பேத்தி கைகுழந்தையாய் இருந்த சமயம் தள்ளுவண்டில் வைத்து சுற்றுவது எனக்கு விருப்பமானது ஒன்றாகும். என் வழ்கையில் பெரிதாய் சாதித்ததுபோல் ஓர் உணர்வு.
ஒரு தினம் அவ்வாறு நான்செல்லும்போது தடையின்றிக் கடக்கும் வழியில் கடக்க அறியாது நான் தடுமாறும் வேளை ஓர் இளைஞன் என்னை கைபிடித்தழைத்து கடக்கச் செய்தான்.தடையின்றி கடக்கும் தடயத்தை பற்றி ஆங்கிலத்தில் விளக்கினான்.நானும் என் அறியாமையை ஏற்று நன்றி கூறினேன் பனி காலங்களில் பனி உடுப்பு உடுத்தி சித்தானையாய் சுற்றிம் நான கோடையானதால் சீலை உடுத்தி இருந்ததைக் கண்டு நீங்கள் இந்தியரா? என்று வினவ,ஆம் தமிழச்சி என்றேன்.ஒரு வித சோகத்தோடு இருந்த அவன் முகம் வினாடியில் ஒளிர்ந்து மறைந்து.அந்த உணர்வைக் கண்ட நான் அவனோடு உரையாட தீர்மானித்தேன்
சாலையோர இருக்கையில் அவனை அழைத்து அமர்தேன்.நீயும் தமிழன் தானே?உன் ஊர் எது என்று கேட்க ,எனகென்று ஒரு தாயகம் இருந்தது, இப்போதில்லை என்றான்.அவன் ஓர் இலங்கை தமிழன் என்றும் ,அங்கு அவன் சுற்றம் பட்ட வேதனையும்,அவன் கண்முன் அவன் சகோதரி.....எழுத கூசும்,,மனம் பதறும் இகழ்ச்சியை நான் இங்கு சொல்லவேண்டியதில்லை. என் கண்ணீரில் அவன் உருவம் மறைந்தது ,அவனுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்தைகள் இல்லை.குலுங்கி குலுங்கி அழுத என்னையும் அவன் தேற்றினான்.என்னை பார்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று வினவினான் ஒரு சாந்தமான மகனாய் தோன்றுகிறாய் என்றேன்.அம்மா நான் ஒரு விடுதலை புலி .என் உயிர் எனக்கல்ல என் மண்ணுக்கே என்றான்.ஓ...இவ்வாறுதான் தீவிரவாதீ உருவாகிறானா??என்ற சந்தேகம் என்னுள் வந்தது.என் சந்தேகத்தை புரிந்தவன் போல் எல்லா தீவிரவாதீயும் என்னை போல்லல்வென்று கூறி ஓர் உணர்ச்சியற்ற புன்னகை புரிந்தான்.அவனோடு இருந்த அந்த மணிதுளிகளில் இருந்த என் உணர்வு என்ன?என்று எனக்கு புரியவில்லை.அநீதியைகண்டு பதரினேனா?வெறுத்தேனா?தாய் அன்பால் உறுகினேனா,புரியவில்லை.அந்த தாக்கம் சில மாதங்கள் என் மனதில் நீடித்தது லண்டன் செல்லும் வேளைகளில் வீதிகளில் இன்னமும் என் கண்கள்அவனை..... தேடுகிறது
Wednesday, May 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
உங்கள் தாக்கத்தினைப் படித்தபோதே எனக்குள் ஓர் சோகம் படிந்துவிட்டது. அந்த இளைஞனின் கதையைக் நேரடியாகக் கேட்ட உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. அந்த இளைஞனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
"என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?"
அன்பு ஜி என் உணர்வுகளை புரிந்து கொண்டதற்க்கு நன்றி.
பதிவு எழுதும் போதும் கண்ணீரோடுதான் எழுதினேன்
இரண்டோர் நாள் இந்த சோகம் நீடிககும்.
அந்த வீரனை நினைத்து பெருமை படும் அதே வேளையில் அவனுக்கு பின்னால் இருக்கும் சோகம் நெஞ்சை என்னவோ செய்கிறது....
அவன் முகத்தை என்னால் மறக்க முடியாது syam,
அந்த நிலையிலும் தவித்துக்கொண்டிருந் எனக்கு
உதவினான் பார்.
.
இதனை படித்ததும் சோகம் தான் நெஞ்சினில் இடம் கொண்டது. உண்மையில் அந்த இளைஞர் பார்த்து பெருமைபடுகிறேன்.எவ்வளவு சோகம் உள்ளிருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் உதவும் நோக்குடன் உள்ள் அவரது மனப்பான்மை பாரட்டத்தக்கது..
அந்த இளைஞருக்கு ஏற்பட்டதை போல் வேறு யாருக்கும் இனி ஏற்படாமல் இருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்..
பாலர் உங்கள் அன்பை நான் பாராடுகிறேன்,
அங்கு இன்னமும் தமிழர் துன்பப் படுகிறாகள்
இறைவன் அமைதி அளிக்க பிராத்திப்போம்.
அம்மா,
நீங்க சொன்னது ரொம்ப சரி. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களிடம் ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்கவே முடியாத துயரம் இருக்கிறது. நீங்க சொன்ன மாதிரி தான் தீவிரவாதிகள் உருவாகின்றனர். சிறிது நாட்களுக்கு முன்னர் youtube இல் ஒரு வீடியோ பார்த்தேன் அதில் ஒரு பெண் தான் ஏன் மனித வெடிகுண்டாக மாறினேன் என்று கூறுவாங்க. யப்பா கேட்கவே அவ்வுளவு கஷ்டமாக இருக்கும்.
இந்த விழிபுணர்வு எல்லோருக்கும் எற்பட்டால்
கண்டிப்பாக அமைதி உண்டாகும் சந்தோஷ்
தாக்கம்.. இதை படித்ததும் என்னுள்ளேயும் ஏற்ப்பட்டது தாக்கம். :-(
எல்லோரும் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். சுற்றமும் அவனை அல்லது அவளை சுற்றி நடக்கிற நிகழ்வுகளும் அவனை மாற்றுகிறது. இங்கு நான் அவர்களை கெட்டவர்கள் என்று சொல்லமாட்டேன். அவர்கள் நீதி அவர்களுக்கு. சமூகம் சிலர் செய்யும் செயல்களை நல்லதென்றும் சிலர் செய்யும் செயல்களை கெட்டதென்றும் வகைப்படுத்திற்று அவ்வளவுதான்.
இலங்கையிலிருந்து குடி பெயரும் பெரும்பாலானவர்கள் அங்கு இழந்த மனநிம்மதி, உற்றார், உறவினர் ஆகியோரின் நினைவிலேயேதான் வாழ்கின்றனர்.
ஆண்டவன்தான் அவர்களின் விடியல்.
மனசு பதிவாளரே,உங்கள் வருகைக்கு நன்றி
நீங்கள் கூறுவது 100% உண்மை.
மிகவும் வருத்தமான விஷயம்..இதற்கு ஒரு நல்ல முடிவி ல்லையா ? என்ற கவலை எப்போதும் இருக்கிறது..படிக்க்கும் காலத்தில் இவர்களுக்காக பள்ளி கல்லூரிகள் சில நாட்கள் மூடினார்கள் ஆதரவுக்குரல்கள் எதிரிப்பு குரல்கள் இரண்டும் வருடக்கணக்காய் ..இன்னும் எத்தனை ஆண்டுகளாகப்போகிறதோ ஒரு விடிவு வர.... :(
முத்துலெச்சுமி,உங்கள் வரவுக்கு நன்றி
நல்ல உள்ளங்கள் கடவுளிடம் பிராத்திக்க
வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்றே படித்தேன்.. இன்று தான் பின்னூட்டமிடுகிறேன்..
இதை படித்த பின் இதயம் வலிக்க தான் செய்கிறது :(..
கெடிலம் நதியை பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கு தெரிந்த்து வற்றிய கெடிலம் தான்.. தினமும் அதை கடந்து தான் பள்ளிக்கு செல்வேன்.. மண்ற்பரப்பை தான் மிகுதியான நாட்கள் கண்டிருக்கிறேன்.. :( :(
பண்ருட்டியை,பற்றிய உங்கள் பசுமையான நினைவுகளையும் எழுதுங்களேன்..
உங்கள் வரவுக்கு நன்றி.நான் கடிலம்
ஆற்றுக்கு சென்றிருந்தபோது 3அடி
தண்ணீராவது இருந்திருக்கும்,நான்
வசித்த ஊர்களைப்பற்றி எழுத
வேண்டும் என்ற அவா இருக்கிறது.
கடவுள் சித்தமிருந்தால்.
தாக்கத்தின் தீவிரம் அதிகமாகத்தான் இருக்கிறது! இதயத்தைக் கனக்கச் செய்யும் அந்த இளைஞனின் கண்ணீர்க் கதை!
புலம்பெயர்ந்த ஈழச்சொந்தங்கள் ஒவ்வொருக்குள்ளும் ஒவ்வொரு சோகம்!
:(
சிபி,
உங்கள் வரவுக்கு நன்றி
Post a Comment