Tuesday, August 7, 2007

மஞ்சள் மகிமை--PART-2

அன்பு வலைப்பதிவு பிள்ளைகளே,பல ஆராய்ச்சிக் குறிப்பிலிருந்து மஞ்சளை நம் முன்னோர்கள் 2000ம் ஆண்டுகளுக்கு முன்பே பயிரிட்டு உபயோகப் படுத்தி வந்ததை அறியலாம்.ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் மஞ்சளை தனக்கு காப்புரிமை வேண்டி காப்புரிமை கழகத்திடம் பதிவு செய்தது கழகங்களின் பல ஆய்வுக்குப் பின் மஞ்சள் நம்முடையது என்னு அறிவிக்கப் பட்டது
அது மட்டுமல்ல அமெரிக்காவின் டபுள்யூ.ஆர்.கிரேஸ் என்னும் பன்னாட்டு இரசாயன
நிறுவனமும்,அமெரிக்க அரசும் வேம்புவை காப்புரிமை கோரி 1990ரில் பதிவு செய்தது,1994லில் காப்புரிமைப் பெற்றது.இந்தியாவின் பூர்வீக தாவரமான வேம்பை அமெரிக்கா தமதாக்கிக் கொண்டதை ஐரோப்பிய காப்புரிமை கழகத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்தது அல்லாமல் இந்த நடவடிக்கையை எதிர்த்து பெல்ஜியத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரும்,ஐரோப்பிய நாடாளு மன்றத்தின் பசுமைக் குழுவின் உறுப்பினருமாக இருந்த மாக்டா ஆல்வோயட்டும்
இந்திய சுற்றுச் சூழல் போராளி டாக்டர் வந்தனா சிவாவும்,ஜெர்மனியின் சர்வதேச இயற்க்கை வேளாண்மை இயக்கத்தின் துணைத் தலைவருமான லிண்டா புல்லார்டும் முறையீடு செய்து,
W.R.GRACE காப்புரிமைப் பெற்றது "உயிரியல் கடத்தல் என்னு குற்றம்" என்று வாதாடி குற்றம் சாட்டினர் அமெரிக்க நிறுவனத்திற்க்கு அளித்த காப்புரிமை ஐரோப்பிய காப்புரிமை
அலுவலகம் 2000ம்ஆண்டு மே 10 ஆம் தேதி தற்காலிய ரத்து செய்தது.பின்னர் மேற்க் கூறியவர்களின் மேல் முறையீட்டின் மீது மூனிச்சில் உள்ள ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் ஆய்வு விசாரணை நடத்தி வேம்பு இந்தியாவில் வரலாற்றுக் காலம் முதல் இருந்துவரும் தாவரம் என்றும்,அதன் மருத்துவம் குணம் அறிந்த இந்தியர்கள ஆண்டாண்டு காலமாக பயன் படுத்திவருவதாலும்,வேம்பு மீதான காப்புரிமையை எந்த நாடோ நிறுவனமோ சொந்தம்
கொண்டாட முடியாது என வாதிட்டனர்.இதை ஏற்றுக் கொண்டு ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் கிரேஸ் நிறுவனத்திற்க்கு வழங்கப் பட்ட காப்புரிமையை முழுவதுமாக ரத்து செய்து தன் இறுதி தீர்ப்பை வழங்கியது.இது பாரம்பரிய அறிவிற்க்கும்,பயன்பாட்டிற்க்கும் கிடைத்த வெற்றி என்று கூறிய ஆல்வோயட்,ஒரு நாட்டின் பாரம்பரியமாக இருந்துவரும் தாவரத்தின் மீதான உரிமை எனும் அடிப்படையை ஏற்றுக் கொண்டு காப்புரிமை வழக்கில் இப்போழுதுதான் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்துள்ளது என்று,முன்னேறிவரும் நாடுகள் தங்கள் நாட்டில் உற்ற இயற்க்கை வளங்களின் மீது அவைகளுக்குரிய மேலாண்மையை நிலை நாட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.நான் இது உண்மைக்கு கடவுள் கொடுத்த வெற்றி என்பேன்.

இனி மஞ்சளின் மகிமையைக் காண்போம்.மஞ்சள் மூன்று வகை உள்ளது,
1.பூசு மஞ்சள்.2கறி மஞ்சள்(சமையல் மஞ்சள்)3.விறலி மஞசள்(கொம்பு மஞ்சள்)
எல்லா வகைக்கும் மருத்துவ குணம் உண்டு.மஞ்சளின் சிறப்பு அம்சங்களாவன,
1.கிருமி நாசினி-antiseptic.
2.அழகு சாதனம்-cosmetic.
3.துணை உணவு-supplementary.
4.விட உயிர் கொல்லி-pesticide.
5.நோய் கிருமி கட்டுப்படுத்தி-antibiotic.
6நோய் நீக்கி-medicine.
இதன் செயல்பாட்டை வரும் பதிவில் கூறுகினேன்.