Monday, April 30, 2007

அன்புத்தாலாட்டு



அம்மு என்றழைத்தது குயிலா
அசைந்தாடி வருவதென்ன மயிலா
உன் இதழென்ன பொற் சிமிளா
இளநகையில் உதிர்தது முத்தின் மணியா
நான் காண்பது கனவா? நினைவா? இறைவா ! இறைவா !


என் தலைமகள் ஈன்றது தங்கமா
மின்னும் தங்கத்தில் பதித்த நல்வைரமா
தளிர் நடை பயில்வது தாரகையா
தண்ணொளி சிந்திடும் வெண்மதியா
இது இரவா ? இல்லை பகலா ? இறைவா ! இறைவா !


விழிஇது மானின் மருள் விழியா
வழிவழியாய் வந்த என்
வம்சாவளி விழி இதுவா
இசையாய் பிறந்தத் தழிழ் நீயா
நான் காண்பது கனவா ? நினைவா ? இறைவா ! இறைவா !

9 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

உலகம் சுற்றும் வாலிபி !! :)))) நல்ல கவிதை நல்ல தமிழ் !! கலக்குங்க அம்மணீ !! ;))))))

ஜொள்ளுப்பாண்டி said...

ஆமா நீங்க தான் அம்முவா?? :))))))

ulagam sutrum valibi said...

பாண்டி கரகோசம் எழுப்பி வரவேற்கிறேன். வசிட்ர் வாயால் பிரம்ம முனிவர் பட்டம் வாகியது,போல் இருக்கு

ulagam sutrum valibi said...

அம்மு நாதேன். அம்முமாவை தான் என் பேத்தி சுரிக்கிட்டா.

balar said...

அழகு தமிழில் அருமையான தாலாட்டு..:)

ஜி said...

கலக்கிப்புட்டீங்க அம்மு...

உலகம் சுற்றும் வாலிபின்ன உடனே, நீங்க 'சிக்குமங்கு சிக்குமங்கு செச்சப் பாப்பா'னு பாட்டுப் பாடிட்டு இருப்பீங்கன்னு நெனச்சேன். இப்படி கவிதையப் போட்டுத் தாக்கிருக்கீங்க... வாழ்த்துக்கள் :))

MyFriend said...

அடடே!! நான் டி.ஆர் வலைக்கு வந்த்திடேனோன்னு நெனச்சேன்.. எல்லாம் அடுக்கு மொழியில் எழுதி கலக்கிட்டீங்களே! :-)

தமிழில் வேரு எழுத ஆரம்பிச்சாச்சு! வாழ்த்துக்கள்..:-)

Raji said...

Supernga Ammu...

ulagam sutrum valibi said...

ராஜீமா,
வருகைக்கும் பின்னுட்டதிற்கும் நன்றி.