அன்புள்ள வலைப்பதிவு பிள்ளைகளே சிறிதளவே ஞானம் இருந்தாலும் பிரச்சனை வருமுன் எச்சரிக்கை செய்யப் படுவதை என் அனுபவத்தில் உணர்ந்ததை கூறுகிறேன்.அதற்க்கு முன் ஞானத்தை அடைவது எப்படி.இயற்கையின் அதிசயத்தைப் பார்க்கும் போதோ அறிவியல் சார்ந்த அதிசயத்தை காணும் போதோ நாம் வியந்து இறைவனின் மகத்துவத்தை உணரும் போது தான் ஞானம் ஆரம்பமாகிறது.அப்போழுது இறைவனை முழுமையாக அறிய மனம் நாடும்.
இறைவனின் படைப்புக்களில் இலச்சனங்கள் உள்ளது போல் அவருக்கும் இலச்சனங்கள் உண்டு
அவையாவன 1.இறைவன் ஒருவராய் மட்டுமே இருக்கிறார் 2.அவருக்கு துவக்கமுமில்லை முடிவுமில்லை.ஆதியும் அவரே அந்தமும் அவரே 3.சுத்த அருபியாய் இருக்கிறார்.அவருக்கு உருவமில்லை.4.அளவில்லா அன்பும் கருணையும் உள்ளவர்.அன்பு கருணையின் இருப்பிடம் அவரே.5.எங்கும் நிறைந்திருக்கிறார்.அவரில்லா அண்ட சராசரமில்லை.(தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார்)6.அணைத்திற்க்கும் ஆதிகாரணர் அவரே,படைப்புக்கள் அணைத்திற்க்கும்
காரண கர்த்தர் அவர்.இவை அணைத்தையும் எல்லோரும் அறிந்தது தான் என்றாலும் அதை தியானித்தல் அவசியம்.
தனக்கு உவமை இல்லாதான் என்று வள்ளுவர் கூறும் ஈடு இணையற்ற உன்னத மகததுவராம் இறைவனை வழிப்பட்டு சரண்ணடைவதன் மூலம் ஞானத்தை பெறுகிறோம்.
வழிபடுதல்-இறைவன் காட்டும் வழியில் நடத்தல்.குற்றமற வாழ்வது.முன் கூறியது போல் பெரிய குற்றங்கள்,சிறிய குற்றங்கள்.இவை மூன்று வகைப் படும்,1.இறைவனுக்கு எதிரான குற்றங்கள்,2.பிறருக்கு எதிரான குற்றங்கள்.3.தனக்குதானே எதிரான குற்றங்கள்.பெரிய குற்றங்களுக்கு மனிதன் இறைவனால் தண்டிக்கப் படுவான்,சிறிய குற்றங்களுக்கு கண்டிக்கப்படுவான்.இறைவனுக்கு எதிரான குற்றம் செய்யாதிருத்தல்
1.சர்வ வல்லமையுள்ள இறைவனை மட்டுமே ஆராதித்தல் வேண்டும்.2.வீனே இவர் நாமத்தை இழுக்கக் கூடாது.பிறருக்கு எதிரான குற்றம் செய்யாதிருத்தல்.1.தன்னிடம் பிறர் எவ்வாறு மதித்து அன்பு காட்ட வேண்டும் என்று நிணைக்கிறோமோ அவ்வாறே பிறறை மதித்து அன்பு காட்ட வேண்டும்.2.தந்தை தாயைப் பேணி மதித்தல் வேண்டும்.3கொலை செய்யாதிருத்தல்.4.களவு செய்யாதிருத்தல்.5பிறர் மனைவியை விரும்பாதிருத்தல்.6.பிறர் உடைமைகளை விரும்பாதிருத்தல்
7.பொய் சாட்ச்சி கூறாதிருத்தல்.தமக்குத் தானே எதிரான குற்றம் செய்யாதிருத்தல்.1.காமத்தில் விழாதிருத்தல்.பெரிய குற்றங்களை பெரும் பாலோர் செய்வதில்லைத் தான் பின்னே நல்லாதானே இந்த கிழம் கூறிக் கொண்டிருந்தது.ஏன் நமக்கு பயம் காட்டுகிறது என்று நினைக்கிறீர்களா?அன்புள்ளம் கொண்ட பிள்ளைகளே உங்களுக்கு இது சம்மந்தமில்லை என்பது நிச்சயம்,ஒருவன் மற்றவனின் உயிரை பறிப்பது மட்டும் கொலையில்லை உயிரைவிட மேலான மானத்தை,நற் பெயரை கெடுப்பவனும் கொலைகாரனே.அவ்வாறு நடப்போரின் நட்பு மட்டுமல்ல அருகில் கூட நீங்கள் செல்லக் கூடாது என்பதே என் அவா.இப்படிப் பட்ட மறைமுக குற்றங்களைப் பற்றி மற்றொறு பதிவில் கூறுகிறேன்.
சிறிதளவே ஞானம் நமக்கு இருந்தால் எவ்வாறு எச்சரிக்கப் படுகிரோம் என்பதைக் காணலாம்.எனக்கு நன்கு அறிமுகமான மாது ஒருவரின் கணவர் வழி சொத்துக்களை அவரின் பங்காளி தகாத முறையில் அபகரித்துக் கொண்டார்கள்.இதை உறவுகள் அண்டை வீட்டார்
எல்லோரும் அறிந்திருந்தாரகள்.அவர்கள் உரிமையை அடைய சட்டத்தின் உதவியை அனுகினார்கள்.அந்த மாதின் கணவர் இல்லாத தருனத்தில் எதிராளிகள் அந்த மாதை அனுகி சமாதானம் முறையில் பேசி தீர்க்க ஒர் இடத்திற்க்கு வருமாறு அழைத்தார்கள்.அண்டை வீட்டாரும் போகுமாறு வற்புறுத்தினர்,அவரும் போக தீர்மானித்தார்.எனினும் கடவுளிடம் பிராத்தித்து வருவதாக கூறினார்.தெய்வத்திடம் பிராத்தித்த பின் செல்ல மறுத்து விட்டார்.
அண்டை மனிதர்களுக்கு சிறிது மனத்தாங்கல் தான்,சமாதானம் பேச வருகையில் அம்மாது மறுத்ததை அவர்களால் ஏற்க்க முடிய வில்லை.சிறிது காலத்திற்க்குப் பின் அதே அண்டை வீட்டார் ஒரு திடுக்கிடும் செய்தி கூறினார்கள்,அந்த மாதை சமாதானத்திற்க்கு அழைத்து மானபங்கம் செய்து மிரட்ட திட்டமிட்டார்கள் என்று.அந்த மாதிடமிருந்த ஞானம் அவரை போகவிடாமல் எச்சரித்தது.நான் எச்சரிக்கை செய்யப்பட்டதை அடுத்த பதிவில். (தொடரும்)
Tuesday, June 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
ஹ்ம்ம்
அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க!!!
நல்ல சஸ்பென்ஸா இருக்கு!!
இது உண்மையாவே நடந்த கதையா இது??
கண்ணு,
உன் பெயர் எனக்கு தெரியவில்லை
நான் சொல்வதெல்லாம் உண்மை
எனக்கு இறைவன் செய்த செயல்களைக் கூறினால் நம்புவது கடினம்தான்
அதுதான் இறைவன் செயல்.ஒர் உண்மை என்ன தெரியுமா? உனக்கு இதை நான் எழுதுவதற்க்கு சிறிது முன்பு தான் ஞானத்தால் ஒரு பிரச்சனை தீர்ந்தது நம்ப முடிகிறதா?மற்றொரு உண்மை உன்னிடமும் ஞானம் உள்ளது அதை உன் பதிவிலிருந்து விளங்குகிறது.
ப்ரெஸன்ட் மிஸ்,
//அன்புள்ள வலைப்பதிவு பிள்ளைகளே//
சொல்லுங்க சொல்லுங்க, ஒரு நிமிஷம் நான் க்ளாஸுக்கு உள்ள வந்து உட்கார்ந்துக்கறேன்...
//சிறிதளவே ஞானம் இருந்தாலும்... //
கீஈஈஈஈஈஈஈச்........ உள்ள வரும்போதே அடிக்கடி ப்ரேக் போட வக்கிறாங்கப்பா இந்தப் பாட்டி.
ஆஹா என்னடா இது? "ஞானமா" ஐயையோ நம்ம கிட்ட சில்லரைக்கு கூட இல்லாத விஷயமாச்சே?, ஞானம்னா கிலோ என்ன விலைன்னு கேட்குறவக நாங்க இல்ல நான். இருந்தாலும் பாட்டி என்னதான் சொல்லி வச்சிருக்காங்கன்னு பாப்பம்
//தன்னிடம் பிறர் எவ்வாறு மதித்து அன்பு காட்ட வேண்டும் என்று நிணைக்கிறோமோ அவ்வாறே பிறறை மதித்து அன்பு காட்ட வேண்டும்//
கண்டிப்பா, ஊருக்கு உபதேசம் பண்ணிட்டு திரியற பார்ட்டிங்க, தான் போட்ட சட்டம் மத்தவனுக்குதான் தனக்கில்லன்னு சுத்துற பார்ட்டிங்கல்லாம் இங்க நிறய பேர் இருக்காங்க.
//பிறருக்கு எதிரான குற்றம் செய்யாதிருத்தல்.1.தன்னிடம் பிறர் எவ்வாறு மதித்து அன்பு காட்ட வேண்டும் என்று நிணைக்கிறோமோ அவ்வாறே பிறறை மதித்து அன்பு காட்ட வேண்டும்.2.தந்தை தாயைப் பேணி மதித்தல் வேண்டும்.3கொலை செய்யாதிருத்தல்.4.களவு செய்யாதிருத்தல்.5பிறர் மனைவியை விரும்பாதிருத்தல்.6.பிறர் உடைமைகளை விரும்பாதிருத்தல்
7.பொய் சாட்ச்சி கூறாதிருத்தல்.தமக்குத் தானே எதிரான குற்றம் செய்யாதிருத்தல்.1.காமத்தில் விழாதிருத்தல்//
இதெல்லாம் செய்யக் கூடாதுதான்னாலும், இதுல ஏதாவது ஒரு குற்றத்தை நாம செய்துகிட்டுத்தான் இருக்கோம்ன்றது கசக்கக் கூடிய ஆனால் உண்மை :-( . கொலைன்றது இன்னொரு மனுஷனைக் கொல்றதுன்னு மட்டும் இல்லை, கடவுளால் படைக்கப் பட்ட எந்த ஒரு உயிரியை அழிப்பதும் கொலைதான். அதற்கு நமக்கு அனுமதியும் இல்லை. சரிதானே பாட்டி.
கலக்கல் க்ளாஸ் பாட்டி. பின் பாதியையும் சீக்கிரமே ரிலீஸ் பண்ணிடுங்க. :-) நன்றி.
//பசங்க யாருக்காவது சந்தேகம் இருந்தா கேட்டு க்ளியர் பண்ணிக்குங்க//
மிஸ் மிஸ் எனக்கொரு சந்தேகம்
//கேளு கண்ணு//
நீங்க எடுக்குற க்ளாஸ் பேரென்ன மிஸ்?
//ஏன்டா டேய் களவாணிப் பயலே, என் க்ளாஸ் பேரேத் தெரியாமத்தான் நீயி இவ்வளவு நேரம் க்ளாஸ கவனிச்சியா?//
இல்ல மிஸ் சப்ஜெக்ட் பேர்தான் மிஸ் புரியல. "வாலறிவு" இதுக்கென்ன அர்த்தம்னு தெரியல : (. தயவு செய்ஞ்சு என் டவுட்டை கிளியர் பண்ணுன்ங்க மிஸ்.
நன்றி
Paati tappunu oru surprise koduthutu mudichuteengalae...So bad..sikkiram podunga nest pathiva..
//இது உண்மையாவே நடந்த கதையா இது?? //
Repeatuu
//கண்ணு,
உன் பெயர் எனக்கு தெரியவில்லை
நான் சொல்வதெல்லாம் உண்மை
எனக்கு இறைவன் செய்த செயல்களைக் கூறினால் நம்புவது கடினம்தான்
அதுதான் இறைவன் செயல்.ஒர் உண்மை என்ன தெரியுமா? உனக்கு இதை நான் எழுதுவதற்க்கு சிறிது முன்பு தான் ஞானத்தால் ஒரு பிரச்சனை தீர்ந்தது நம்ப முடிகிறதா?
//
ஆஹா!! கேக்கறதுக்கே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே பாட்டி!! நீங்க என்ன some kind of prophet மாதிரியா?? இது மாதிரி Prophets-கு தான் இந்த மாதிரி ஞானம் எல்லாம் உண்டு என்று சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்!! :-)
//மற்றொரு உண்மை உன்னிடமும் ஞானம் உள்ளது அதை உன் பதிவிலிருந்து விளங்குகிறது.//
நான் அப்படி என்ன எழுதிட்டேன்?? எல்லாம் விக்கிபீடியா போன்ற மற்ற வலை தளங்களை பார்த்து எழுதுவது தானே??
அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் பாட்டி!! வெகு நாளா நான் பல பேரை கேட்டு,சரியான பதில் கிடைக்கவில்லை.
கடவுள் ஏன் உலகத்தை படைத்தார்??
தான் படைத்த அழகான உலகத்தை யாராவது ரசிக்க வேண்டுமே என்பதற்காக மனிதனை படைத்தார் என்று கூறுகிறார்கள். ஆனால் உலகத்தையே ஏன் படைக்க வேண்டும்???
அவருக்கு தனிமையாக இருந்தது ,அதனால் தான் என்று கூறலாமா??
ஆனால் மனிதர்களுக்கு ஏற்படும் தனிமை போன்ற எண்ணங்கள் இறைவனுக்கு ஏற்படுமா???
இது போல் ஆயிரம் கேள்விகள் என்னூள். :-)
கண்ணு,
உன் மாதிரி வாலுப் பையனின் அறிவு இல்லை .வால் என்றால் தூய்மை என்று பொருள்.இறைவன் துய்மையானவர்,மனிதன் அனுக முடியாத கற்பனைக்கு எட்டாத தூய்மையுள்ளவர் இறைவனிடத்திலிருத்து வரும் ஞானத்தை வாலறிவு என்கிறேன்
தூய்மையான அறிவு.
ராஜிமா,
இது முற்றிலும் உண்மை. விரைவில் எழுதுகிறேன்
//பாட்டி!! நீங்க என்ன some kind of prophet மாதிரியா//
கண்ணு,
நான் சாதரண மனுஷி prophet அதெல்லாம் அறவே கிடையாது.இறை நம்பிக்கை நிறைய உண்டு அவ்வளவே.
இறைவன் அவர் முன் குறித்தவர்க்கு எச்சரிக்கையோ,மன அமைதியையோ,
அல்லது மன தெளிவையோ பிறர் வழியாய்,ஏன் அறிமுகம் இல்லாதவர் வழியாய்யும் கூற வல்லவராய் இருக்கிறார்
//உன்னிடமும் ஞானம் உள்ளது அதை உன் பதிவிலிருந்து விளங்குகிற//
கண்ணு,
உன்னுடைய வான் வெளி விங்ஞானம் பதிவில் உன் ஞானத்தைக் கண்டேன்
கற்று அறிவது அறிவு.கற்றதை தெள்ளத் தெளிவென விளக்குதல்,எளிதில் விளங்கும் வகையில் கூறுதல். வான் வெளி விங்ஞானத்தில் தான் இறைவனின் மகிமை விளங்கும்,
//ஆப்பு ரெடியா வெச்சிருக்காரு
கடவுள். இப்படி//
இங்கு இறைவனின் மகிமையை உணறுகிறாய்.
கண்ணு cvr,
நீ கேட்கும் மற்ற கேள்விகளுக்கு விளக்கம்,பதிவில் இடவா?இல்லை தனியாய் விளக்கவா? பதிவு என்றால்
தற்ச்சமயம் இயலாத நிலையில் இருக்கிறேன்,தனியாய் என்றால் நீ விரும்பினால் உன் email id கொடு.
என்னோடைய email என்னுடைய profile பக்கத்திலேயே இருக்கு பாட்டி!!
பதிவிலேயும் போடுங்க,ஆனா எனக்கு மி ன் அஞ்சலும் அனுப்புங்க!!
எனக்கு அவ்வளவா பொறு்மை கிடையாது!! :-))
//இறைவனிடத்திலிருத்து வரும் ஞானத்தை வாலறிவு என்கிறேன் தூய்மையான அறிவு.//
தேங்க்ஸ் பாட்டி, :)
உங்களுக்கு ஒரு வேலை கொடுத்து இருக்கேன்,,,
http://tsivaram.blogspot.com/2007/06/blog-post_22.html
சீக்கிரம் செய்து விடவும்.
நடத்துங்க! சூப்பர்.. நல்ல கருத்துக்கள்!
ஓஹோ... அப்போ ஞானம் இருந்தா, பரிட்சைல எந்த கேள்வி கேப்பாங்கன்னு கரெக்ட்டா தெரியும்னு சொல்றீங்க ;))))
ஹி..ஹி.. சும்ம லுலுவாய்க்கு...
நல்லா இருக்குது தொடர்..
//ராஜிமா,
இது முற்றிலும் உண்மை. விரைவில் எழுதுகிறேன் //
Hmmm sari paati :)
Dreamzzகண்ணு
வரவுக்கு மகிழ்ச்சி.
கண்ணு ஜி,
கண்டிப்பா ஞானம் இருந்தால் படிப்பார்கள் படித்ததன் பயனாக
ஞானத்தால் வருவதை அறிவார்கள்.
Post a Comment