Monday, July 9, 2007

" 8 " போட்டாச்சு.

நம்பளைப் பற்றியே நாம்ப பீத்திக்கனுமுன்னா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு,என்ன செய்யிறது பீத்துக்குவோம்.
வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை,ஆனால் நல்ல மனைவியாய்,தாயாய், பாட்டியாய்,தோழியுமாய் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெறுங்கினப் பொருள் கைப்பட வேண்டும்.என்பதில் நம்பிக்கைக் கொண்டவள்.

1.தெய்வ நம்பிக்கை:-
இறை நம்பிக்கை சிறு வயதுமுதல் என்னுள் உருவானது.இந்த நம்பிக்கைத் தான் என் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட தாழ்விலும்,துன்பத்திலும் உறுத்துனையாய் இருந்தது.மலைப் போல் வந்த துன்பங்கள் பனிப் போல் மறைவதை நான் மட்டும்மல்ல என்னை சூள்திருப்பவர்களும் உணர்வது.இறை நம்பிக்கையால் மனதில் உறுதி உண்டு.
2.அன்பு பாசம்:-
என்னுடைய strength and weakness என் பிள்ளைகள் என போத்தி.என் அன்புத் தொல்லைத் தாங்க முடியாமல் அவர்கள் அவதி படுவதும் உண்டு.அன்பினால் நன்பர் குழு அதிகம்,நான் அன்பு காட்டுவோர் என்னிடம் அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.
3.நட்பு:-
எத்தனை நாட்கள்,வருடங்கள் ஆனாலும் நன்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது.அவர்களின் இன்ப,துன்பங்களில் பங்கு கொள்வது.
4.இளகிந மனம்:-
துன்ப,மன வருத்தத்தில் உள்ளவர்களைக் கண்டால் வலிய சென்று ஆறுதல் கூறுவது முடிந்த அளவு உதவுவது.இதனால் இக்கட்டில் மாட்டிக் கொள்வது.இருப்பினும் வருத்தத்தில் உள்ளவர்களை காணாமல் போக என்னால் இயலாது.
5.செய் நன்றி:-
செய் நன்றி என்றும் மறப்பதில்லை.செய்த உதவிக்க்கு கைமாறு செய்வதில் ஆர்வம் கொள்வது.
6.பொறுப்பு:-
பொறுப்புக்களை ஏற்க்கும் போழுது அதில் சிரத்தையுடன்,சிறப்பாக செய்வது,அதன் பயனாக நல்ல மனிதர்களின் அறிமுகத்தைப் பெற்றது.
7.பாரம்பரியப் பெருமை:-
நமது கலாச்சாரம்,பழக்க வழக்கங்கள் அதன் அடிப்படை அறிவியல்.தாய் வழிப்பாட்டி,தந்தை வழிப் பாட்டி,கணவர் வழிப் பாட்டி இவர்களின் கைவைத்திய்,சமையல் குறிப்பு, கைவேலை இவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளுதல்.
8.
சூழ்நிலைக்கு ஏற்று அமைவது:-
எந்த சூழ் நிலையையும் ஏற்று வாழ்வது,எதைக் கொடுத்தாலும் சுவையுடன் சமைப்பது,கலை நயத்துடன் அமைப்பது,ஒன்றே குலம் என்ற கொள்கை கொள்வது.
ஒரு வழியா முடிச்சாச்சு அப்பா!

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

ஆள் பிடிக்கிறது:
கண்ணபிரான் ரவி சங்கர்
பாலர
செந்தில்
சிங்கமுல ace
முத்துலச்சுமி
தேவபுதல்வன்
ஜொள்ளு பாண்டி
செல்வேந்திரன்

33 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிஸ்
எட்டு பதிவைத் திருக்குறள் அதிகாரம் மாதிரி அழகாப் போட்டிருக்கீங்க!

//நான் அன்பு காட்டுவோர் என்னிடம் அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு//
:-))

//வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை,ஆனால் நல்ல மனைவியாய்,தாயாய், பாட்டியாய்,தோழியுமாய் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்//

இது எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா மிஸ்! :-)
காரியம் யாவினும் கை கொடுத்து
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி - பாட்டு நினைவுக்கு வருது!

//கண்ணபிரான் ரவி சங்கர்//

ஆகா! அழைப்புக்கு நன்றி! இதோ,
அ என்றால் 8!

ulagam sutrum valibi said...

அன்பு ரவி,
என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி மகிழ்ச்சி.உங்கள் "அ" என்றால் "8" ஐ ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

Dreamzz said...

ஆஹா! அருமையான எட்டு!

Dreamzz said...

//எதையும் சாதிக்கவில்லை,ஆனால் நல்ல மனைவியாய்,தாயாய், பாட்டியாய்,தோழியுமாய் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
//

இது தாங்க சாதனை! இது கிடைக்க, எவ்வளவு கஷ்டப்படனும்!

Dreamzz said...

mm... makes me rething my prioirities. nice post!

ulagam sutrum valibi said...

கண்ணு dreamzz,
மகிழ்ச்சி,நன்றி.உன்னைப் பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் நீ ஒரு சிந்தனையாளனாக வருவாய் உன் சிந்தனைகளை எழுத்துரு கொடு.ஒரு நாள் இதை உணர்வாய்.,

CVR said...

என்ன பாட்டி!!
என்னை ஞாபகம் இருக்கா???
எப்படும் போல அனுபவ பதிவு!!
படிக்கறதுக்கு நல்லா இருந்துச்சு!!

எது இருக்கோ,இல்லையோ வாழ்க்கையில சந்தோஷம் தான் முக்கியம். அது கிடைக்கறாப்போல வாழற எல்லா வாழ்வுமே சாதனைகள் தான்!!!
உங்க எட்டுல அந்த சாதனை நல்லாவே தெரியுது!!
வாழ்த்துக்கள்!! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா உங்கள் அன்புக்கு நன்றி வாலிபி
நான் எட்டு பதிவு போட்டுவிட்டேன் உங்களுக்காகவும் போட்டதாக நினைத்துக்கொள்ள முடியுமா?

இங்கே பாருங்கள்.

http://sirumuyarchi.blogspot.com/2007/07/blog-post.html

ulagam sutrum valibi said...

கண்ணு,
உன்னை எப்படி மறப்போன்.blog கில்
சில போரிடம் எனக்கு ஒரு வித அன்னுன்யம் ஏற்பட்டு இருக்கிறத
அதில் நீயும் ஒருவன் இது இறைவனின் சித்தம் போலும்.இங்கு பேத்திக்காக செலவிடும் நேரம் அதிகம். yahoo வில் தமிழ் உரு தெரிவதில்லை,அதுதான் பிரச்சனை.

ulagam sutrum valibi said...

முத்துலச்சுமி,
என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி

களவாணி said...

ஹாய் பாட்டி,

ஆள் பிடிக்கிறது:

கண்ணபிரான் ரவி சங்கர்
பாலர
செந்தில்
சிங்கமுல அcஎ
முத்துலச்சுமி
தேவபுதல்வன்
ஜொள்ளு பாண்டி
செல்வேந்திரன்

என்ன இது அக்கிரமம், அநியாயம். இப்படி நல்லவங்க லிஸ்ட்ல என் பேரா?. உண்ட கட்டி வாங்குறதுக்கு வரிசையில முட்டிக்கிட்டு நிக்கிறவன் நான் என்னியக் கூட "8" போடக் கூப்பிட ஆள் இருக்காங்களா? டேங்க்ஸ் பாட்டி, கண்டிப்பா போடுறேன். ஆனா கொஞ்சம் நேரம் எடுத்துப்பேன். என் கிட்ட இருக்குற பெருமை படக் கூடிய விஷயமா? கஷ்டந்தான். இதுல 8 போடாத 8 பேரை கூப்பிடனுமா? விடிஞ்சது.

அழைத்ததுக்கு ரொம்ப நன்றி பாட்டி. :)

களவாணி said...

பாட்டி,

சூப்பர் 8. உங்களுக்கு லைசென்ஸ் கிடைச்ச மாதிரிதான்னு வச்சிக்குங்க...

நன்றி

செந்தில்...

Raji said...

//இது தாங்க சாதனை! இது கிடைக்க, எவ்வளவு கஷ்டப்படனும்//

REPEATUUUUUUU.....

Paati idhukku paeru dhaan thanadakkamoo...

Raji said...

1.Ellaraiyum padaichavaraachae ..avar kitta kandippa nambikka vaendum dhaan

2.Paasakaara paati
3.Aamam paati..Natpu..
4.5.6. idhulaam great :-)
7.//சமையல் குறிப்பு, கைவேலை இவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில் மகிழ்ச்சியும் //

Ahaha enakku samyalukku tution vaenumnga ...

8.Great ...

Raji said...

15 roundaa pottutu naan apeetu ayikkuraen paati ma

selventhiran said...

தப்பா எடுத்துக்காதீங்க பின்னுட்டமாக மட்டுமே எட்டு போடுவது என சங்கல்பம் எடுத்திருக்கிறேன். இதோ அந்த எட்டு:

1. நான்கு குழந்தைகள் போதும் இதற்கு மேல் குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்த எனது பெற்றோர் ஒரு கிறித்துவ மிஷினரி மருத்துவமனையில் கருவைக் கலைக்க தீர்மானித்து சிகிச்சை எடுத்திருந்தனர். அதில் ஏதோ தவறு நேர்ந்து, இந்த பழுதடைந்த பூமியில் அவதரித்தது.

2. அமைதியான சுபாவமும், கூச்சமும் உள்ள பாரம்பரியம் மாறாத ஒரு குடும்பத்தில் ஒரு விநோத ஜந்தாக சிறுவயதிலிருந்தே கிரிக்கெட், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம், சிறுபத்திரிக்கை என சிறகுகளை விரித்தது.("உயர.. உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதுடா" -அப்பா)

3. வறுமை, பிரச்சனைகள் என பள்ளிப்படிப்பே பாதியில் முடிந்தாலும், போராட்ட குணத்தோடு தொலைதூர கல்வியில் பட்டமும், கணிணி, தட்டச்சு இன்னபிற குமாஸ்தா சமாச்சாரங்களை கற்றுக்கொண்டது.

4. பதினைந்தாவது வயதிலிருந்தே சொந்த உழைப்பில் சாப்பிடுவதும், சாப்பாடு போடுவதும் (குடும்பத்திற்கு)

5. ஒப்பந்த ஊழியனாக தமிழகத்தின் முன்னனி ஊடகம் ஒன்றில் பணியில் சேர்ந்து இரண்டே ஆண்டுகளில் அதன் முக்கிய பொறுப்புகளில் ஒன்றினை வகிக்கும் அளவிற்கு உயர்ந்தது.

6. பணி ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பால் எண்ணற்ற ஆளுமைகளை, எழுத்தாளர்களை சந்திக்க முடிகிறது. எத்தனையோ ஊர்களுக்கு பயணிக்க முடிகிறது.

7. அழகாக இருப்பது.

8. நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொண்டது.

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்.

Dhavappudhalvan said...

//ulagam sutrum valibi said...
தேவபுதல்வன்,
உங்களை சின்ன வேலை. 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.\\

//Dhavappudhalvan said...
அக்கா!(பேரன்,பேத்தி நான் நேரடியாக எடுக்காததால் ).தேவபுதல்வன் அல்ல
'தவப்புதல்வன்'
2) தங்கள் 8ஐப் பார்த்தேன். அது சின்ன வேலையில்லை, பெறிய வேலை.
3)10ம் தேதியே பதிவை பார்த்து விட்டேன். என் கருத்துக்களை,உங்கள் தரவிலே கொட்ட முடியவில்லை. அன்றிலிருந்து இன்று வரை comments
பகுதி திறக்க முடிந்தால்தானே. அதனால் என் எண்ணங்களை, என் தரவிலேயேக் கொட்டிவிட்டேன். முயற்சி செய்துப் பார்க்கிறேன்,என் கருத்துக்களை தங்கள் தரவிலேக் கொட்ட.\\

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களைச் சேரும்.
நான் புதியவன் தரவுகளுக்கு.
என்னால் 8 போடமுடியுமா? நினைத்துப் பார்க்கவில்லை. என் தரவிலே நண்பர்கள் இருவர். தொடர்ந்து பதில் தருபவர் ஒருவர். அவர் பாலசுப்ரமணியம் கணபதி. (http://madscribblings.blogspot.com),(http://madscribbler-kirukan.blogspot.com/) 'கிறுக்கல்கள்' என்ற ஆங்கிலம் மற்றும் தமிழ் தரவு இயக்கி வருகிறார்.

Dhavappudhalvan said...

எம்மைத் தொடர்புக் கொண்டதற்கு நன்றி

Jeevan said...

Very positive eight information’s about you! "என் அன்புத் தொல்லைத் தாங்க முடியாமல் அவர்கள் அவதி படுவதும் உண்டு." you are such a sweet person!

Wish the happiness always be with you:) i just too love our tradition.

balar said...

தாமதமான வரு்கைக்கு மன்னிக்கவும் பாட்டிம்மா..
நிறைய மாறுதல்கள் எனது பக்கம் மற்றும் புது வேலை மாற்றத்தால் நேரமின்மை..

நீங்கள் போட்ட எட்டு சாதரண எட்டு இல்லை சூப்பர் எட்டு அதுவும் அனுபவ எட்டு..

நேரமின்மை காரணமாக நான் கொஞச நாள் பதிவு எதுவும் எழுதாமல் இருக்கிறேன் மீண்டும் பதிவு எழுத
ஆரம்பிக்கையில் கண்டிப்பாக முதல் பதிவு தங்களின் எட்டு பற்றிய அழைப்பு பதிவு தான்.

ulagam sutrum valibi said...

கண்ணு செந்தில்,
என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி.உன் 8ஐ ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

ulagam sutrum valibi said...

ராஜிமா,
உன் பின்னுட்டுக்கு மிக்க மகிழ்ச்சி.
உனக்கு சமையல் குறிப்பு என்ன எது வேண்டுமானலும் கேள் கூறுகிறேன்.

ulagam sutrum valibi said...

//பின்னுட்டமாக மட்டுமே எட்டு போடுவது என சங்கல்பம் எடுத்திருக்கிறேன்.//

உங்கள் 8 மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.நீங்கள் உண்மையில் சிறந்த சாதனையாளர் தான்.மென்மேலும் வளர என் ஆசிரும், வாழ்த்துக்களும்.

ulagam sutrum valibi said...

திரு தவப்புதல்வன் அவர்களே,
என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி.
8ஐ என தரவில் இல்லை,உங்கள் பதிவில் போடவும்.8 நபரை அழைக்கவும்.

ulagam sutrum valibi said...

//Jeevan said,
Very positive eight information’s about you! "என் அன்புத் தொல்லைத் தாங்க முடியாமல் அவர்கள் அவதி படுவதும் உண்டு." you are such a sweet person!//
Thanks jeevan,நீங்களும் என்னை பாட்டி என்று அழைத்து அடிக்கடி gomments போட்டீர்களானால் என் அன்பு தொல்லைக்கு ஆளாவீர்கள்.முன்போ எச்சரித்து விட்டேன்.இறைவன் சித்தப் பட்டால் சென்னை வரும் போழுது உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

ulagam sutrum valibi said...

//jeevan said,
Wish the happiness always be with you:) i just too love our tradition//
இறைவனில் நாம் எல்லோரும் மகிழ்ந்திருக்க அருள்வாராக ஆமென்.நமது கலாச்சாரத்தின் அடிப்படை அறிவியலை வரும்பதுவில் எழுதுகிறேன்,நீங்கள் comments எழுதவேண்டும்,இறைவன் என்றும் உங்களோடு இருப்பாராக.என் அன்பும் ஆசிரும்.

ulagam sutrum valibi said...

//தாமதமான வரு்கைக்கு மன்னிக்கவும் பாட்டிம்மா//

கண்ணு Balar,
இதுக்கெல்லாம் மன்னிப்பு எதுக்குமா.
ஆனால் உன் BLOG ஐ காணாது எனக்கு மனவருத்தமாய் இருந்தது எப்படி உன்னை contact செய்வது என்று தெரியவில்லை.
இப்போழுது மகிழ்ச்சியாய் இருக்கு.
இறைவனுக்கு நன்றி.

ulagam sutrum valibi said...

//நிறைய மாறுதல்கள் எனது பக்கம்//
கண்ணு,
மாற்றஙகள் எல்லாம் இறைவன் நன்மையாய் முடிப்பார்.

சிவபாலன் said...
This comment has been removed by the author.
காட்டாறு said...

உங்க பதிவெல்லாம் (முதன் முறையாக) வாசிச்சாச்சி. எல்லாத்தையும் தான். அழகா, அருமையா, உணர்வு பூர்வமா எழுதுறீங்க. வாழ்த்துக்கள். மேலும் எழுத.

எப்படி உங்களை மிஸ் பண்ணினேன்... தெரியலையே. கொஞ்ச மாதங்களாக கூகிள் ரீடரில் மட்டும் வாசிப்பதால் கூட இருந்திருக்கலாம். வேலையினிமித்தம் பல சமயங்களில் மறுமொழி கொடுக்க முடியாமல் கூட போகும். ஆனாலும் ரீடரில் வாசித்து விடுவேன். உங்களையும் இணைத்து விட்டேன் கூகிள் ரீடரில்.

ulagam sutrum valibi said...

காட்டாறு,
உன் பேர் என்னமா? முதல் வரவுக்கு மிக்க மகிழ்ச்சி,மீண்டும் வந்து பினனூட்டு இடவும்.

ulagam sutrum valibi said...
This comment has been removed by the author.
களவாணி said...

பாட்டி எட்டு போட்டாச்சு. தாவு தீந்துடுச்சு. வந்து பார்த்துட்டு ஏதாச்சும் சொல்லி வைங்க...:)