Friday, June 1, 2007

உண்மை உண்மையைத் தவிர வேரில்லை

அன்பு வலைப் பதிவாளர்களே, இதோ பேய்!! இதுதான்டா பேய்!! என்று உருவத்தைக் காட்ட இயலாது. நான் 8டும் 9தும் படிக்கும் போது boarding school இருக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. அது கன்னிகா ஸ்திரிகள் நடத்தும் பள்ளி. அங்கு dormitory என்றும் special rooms என்றும் இரு பிரிவுகள் இருந்தது dormitory பிரிவில் இருந்தவர்களுக்கு toilet சற்றுத் தள்ளி இருக்கும் நான் special room மில் இருந்தேன் . எங்களுக்கு room மில் bath/toilet உண்டு. Study hall எல்லோருக்கும் பொது. அங்கு எங்களை ஒரு கன்னிகா ஸ்திரி கண்கானிப்பார. நான் சேர்ந்த புதிதில் நாலைந்து மாணவிகள் சிலரைச் சேர்த்துக் கொண்டு கண்கானிப்பவரிடம் சைகை காட்டுவார்கள்,அவரும் தலை அசைப்பார் அவர்கள் போய் சிறிது நேரத்தில் திரும்புவார்கள். எதைச் செய்தாலும் உத்திரவு வாங்க வோண்டும். இது அனுதினம் நடக்கும் ஒன்றாக இருந்தது. .ஒரு நாள் ஒரு பெண்ணிடம் இதைப் பற்றி கேட்டேன்,முதலில் தயங்கியவள் பிறகு கூறியதைக் கேட்டு எனனால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிப்பதைக் கண்டு கோபம் கொண்டு உனக்கு தைரியமிருந்தால் தனியாய் சென்றுவா பார்கலாம் என்று சவால் விட்டாள். சில மாணவிகளும் என்னை சாடினார்கள்.செய்தி இதுதான் toilet டில் பேய்!! இருந்து கொண்டு தனியே செல்லும் பொண்களை பல வகையில் சீண்டி இருக்கிறது இதில் பாதிக்கப் பட்டவர்கள் உடல், மன நலன் குன்றி வீடு திரும்பி இருக்கிறார்கள். தவிற்க முடியாதவர்கள் கூட்டு சேர்க்கும் முறை கையாண்டிருக்கிறார்கள். பயமென்றால் கிலோ என்ன விலை என்று சிறு வயது முதல் கேட்பவள் நான்.அதுமட்டுமல்ல யாருக்காவது பிரச்சனை என்றால் முன்னின்று போராடுவது என் வழக்கம்.எனவே boarding mistress ரிடம் சென்று இதைப்பற்றிக் கேட்டேன்,உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம் உனக்கு தனி வசதி இருக்கிறதே பிறகு என்ன?பேய்யாவது பிசாசாவது. அதெல்லாம் மன பிரம்மை என்றார்.நான் இதை விடுவதாக இல்லை mother superior சென்று விவரித்தேன் அவர்கள் என்னை அன்புடன் மகளே இந்த பேய், கூட்டமாய் போவோரிடம் ஏன் ஒன்றும் செய்வதில்லை? தனியாய் போவோர் தான் ஏதோ கூறுகிறார்கள். அது வெறும் பயம்,யாரோ கிளப்பிவிட்ட வதந்தி வா நாம் இருவரும் சென்று பார்கலாமா?உனக்கு பயமில்லையே? என்றார். பயமா? எனக்கா?போகலாம் வாருங்கள் என்றேன்.நாங்கள் அங்கு சென்ற போது மாலை 7மணி இருக்கும்.சுற்றி பார்த்து விட்டு வெளியே வரும் போழுது வவ்வால் ஒனறு என தலையில் அடித்துக் கொண்டு வெளியேறியது நான பயப்பட வில்லை மாறாக mother தான் பயந்தார்கள்.வெளிச்சக் குறைவினால் தான் வவ்வால் தங்குகிறது, தயவு செய்து நல்ல பவர் பல்பு போடுங்கள் என வேண்டினேன்.உடனே அதை செயல் படுத்தினார்.

அதிலிருந்து நான் சற்று popular ஆனேன்.மணவிகள் எனனோடு நட்புறவோடு பழகினார்கள். சிலர் மட்டும் மனமடிவாகவே இருந்தார்கள்.நான் அவர்களிடம் வலியச்சென்று உறவாடுனேன். அப்போழுது புரிந்தது,அவர்கள் தான் பாதிக்கப் பட்டவர்கள் எனறு.அதில் ஒரு பெண் உடல் நலம் குன்றி மெலிந்திருந்தாள். அவளை mother பராமரித்து பள்ளி இறுதி தேர்வு எழுதுமாறு உற்ச்சாக முட்டியதால் தேர்வேழுத காத்திருந்தாள். பேயின் செட்டைகளை அவர்கள் கூறும்போது எனக்கு தாளாத சிரிப்பு வரும்,அடைக்கிக் கொள்வேன் வெறும் பிரம்மை என நினைத்தேன். நான் தீர்மாணித்தேன் தனியாய் toilet க்குப் போய் பயத்தைப் போக்குவது என்று, boarding mistress ரிடம் இதைத் தெரிவித்தேன் அவ்வளவுதான் மிகவும் கடுமையாக கோவித்துமல்லாமல் என்னை கணகாணிக்கும்படி கூறிவிட்டார். ராசமாணிக்கம் எனனும் மாது அவர்தான் அங்கு வயதில் மூத்தவர்.5அல்லத் 6வயதுள்ள துளுக்கி பிறந்த சில நாளில் convent வாசலில் விடப்பட்ட குழந்தை. அங்கு அவள் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை ,6லிருந்து sslc வரை தான் boarding இருக்க அனுமதி எனவே துளுக்கி தான் அங்கு குட்டிப் பிள்ளை. study hall, prayer hall இரண்டு உண்டு ,எதோ ஒர் hall லில் கூடவேண்டும் என்றால், boarding mistress 6 முதல் sslc வரை அங்கு கூடவேண்டும் என்பார். அவர் தொடங்கு முன்பு நான் ராசமாணிக்கம் அக்காவிலிருந்த் துளுக்கி வரை என்பேன். முதலில் சிரித்தவர்கள் பின்னர் எல்லோரும் என்னோடு சேர்ந்து கூற துவஙகினார்கள். ராசமணிக்கம் அக்கா குசினியில் உற்கார்ந்து காலையிலிருந்து மாலை வரை வெங்காயம் அரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் சற்று தொலைவில் வரும் போதே வெங்காய மணம் விசும். ராசமாணிக்கமக்கா வரும பின்னே வெங்காய மணம் வரும் முன்னே, என்பேன் .அவர்கள் சிரித்தாலும் சற்று கடுப்பு உண்டு என்று நினைக்கிறேன். நான் தனியா toilet போகும் செய்தி அவர்களுக்கும் எட்டி விட்டது போலும், என்னைக் கண்டு'' அடியம்மா உன நெஞ்சிலே அஞ்சு யானைய நிறுத்தலாம் போல எம்புட்டு தைகிரியம் ,பொட்ட புள்ளைக்கு இம்புட்டு ஆகாதுடியம்மா" என்று பலவாராய் வாங்கு,வாங்குனு வாங்கினார். நான் செல்ல தேவை இல்லை.ராசமாணிக்கம் அக்காவிலிருந்து துளுக்கி வரை என்னை கண்டித்து watch பன்ன ஆரம்பித்து விட்டார்கள். நானும் பயத்தைப் போக்கும் முயற்ச்சியை விடுவதாக இல்லை.சமயம பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த சமயமும் வந்தது!!!.(தொடரும்)

10 comments:

CVR said...

ஆஹா!!
பாட்டி நீங்க சாதாரண பாட்டி இல்லை,நிறைய வீர சாகசங்கள் எல்லாம் பண்ணி இருக்கீங்க போல!!
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!! :-)

ulagam sutrum valibi said...

வாபா அன்பு போராண்டி,
உன் பின்னுட்டுக்கு மிக, மிக சந்தோஷம்,அடுத்தபதிவு விரைவில்.

balar said...

நீங்க துணிச்சல் மிக்க பாட்டி தான்..நான் நினைக்கிறேன் உங்க துணிச்சலை பார்த்து பேய்க்கே உங்க கிட்ட பயம்னு..:))

சீக்கிரம் வரட்டும் தொடர் பகுதி..இப்படி பிடி சாமி கதை மாதிரி சஸ்பென்ஸ்ல நிறுத்திட்டீங்களே..:)

ulagam sutrum valibi said...

வாபா பிரிய பேராண்டி
எங்கேடா நம்ம பேரனைக் காணோமேனு பார்தேன்
உங்களுக்க சிக்கிரம் போடுறேன்,

களவாணி said...

இதோ அட்டன்டன்ஸ் போட்டுட்டன்.

எனக்கு பேயைக் கடுப்பேத்துர கதைன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் இந்தப் பாட்டிகள்லாம் பேய்க் கதைகளை வாறி விடுவாங்க. நம்ம பாட்டியைப் பார்க்கலாம்ன்னு வந்தா, இவங்க நம்ம "ஜென் நெக்ஷ்ட்" பாட்டி. புதிய தலை முறைக்கு இப்படிப் பட்ட, பேரன்களுக்கு வீரம் புகட்டுற பாட்டி தான் தேவை. எனக்கும் ஒரு பாட்டி இருந்தாங்க, நான் கிச்சனுக்குள்ள நுழையும் போதெல்லாம் போய் எதையாவது ஒடச்சி வச்சிருவேன்னு, தொன்டையில அடிச்சிக்கிட்டே பேய் மாதிரி சத்தம் கொடுத்து பயமுறுத்துவாங்க. இப்படியெல்லாம் பண்றது குழந்தைகளோட மனோவலிமையை பாதிக்கும்னு இனிமேலாவது பெற்றோர்கள் புரிஞ்சுக்கணும்.

ஆனா என்னப் பாட்டி, அவனவன் "சிவாஜி" ரிலீஸ்க்கே மணை காஞ்சி போய் ஒக்கார்ந்துக்கீடுக்கானுவ. நீங்க என்னடான்னா அந்த சமயமும் வந்தது!!!.(தொடரும்)
சீரியல்ல வர்றதெல்லாம் போட்டு காய வக்கிறீங்க. சீக்கிரம் அடுத்த பகுதியப் போடுங்க, அதுலயும் டு பி கன்டின்யூட் எல்லாம் வாணா சொல்ட்டேன்.

யப்பா இந்தப் பின்னூட்டத்துக்கு பதிலா ஒரு பதிவேப் போட்டிருக்கலாம் போலருக்கு. :))

Raji said...

Apa apuram enna aachu?
Neenga vaera paei undunu solli irukeenga?

ulagam sutrum valibi said...

வாபா ஏராசா,
உன் பினனுட்டத்துக்கு மிகமிக சந்தோக்ஷம்
பொம்பளப் புள்ளையே பயம்முன்னு சொல்லக்கூடாது
அச்சம் நாணம் மடம் பயிற்புல ,அச்சம என்பதற்க்கு
அர்த்தமே வேர.ஆண்புள்ள பயம்ன்னு சொன்னா அது
யார் வீட்டு புள்ளையா இருந்தாலும் சாமீ ஆடிருவேன்

ulagam sutrum valibi said...

வாமா பாப்பு,
ராஜீ பேயே இருந்தாலும் அது நம்மள என்ன செய்திடும்?

ஜி said...

பாட்டிமா... அம்புட்டு தைரியமா உங்களுக்கு?? நான்லாம் பேய் இல்லைனு நம்பினாலும் பேய்னு சொன்னாலே அந்த இடத்துக்கு போகவே மாட்டேன்... :((

ulagam sutrum valibi said...

//வாளும் வேலும் என் இரு கண்கள்//
//நான்லாம் பேய் இல்லைனு நம்பினாலும் பேய்னு சொன்னாலே அந்த இடத்துக்கு போகவே மாட்டேன்//
ஏபா பேராண்டி,
வாளும்,வேளும் டுபாகூரா?இதோ
தாய் நாடு வாரேன்.பெங்களுரு
வந்து உன்னை பேசிக்கீரேன்.