சற்று முன் செய்தியில் 15மே பிராமணர் எடுத்த நல்ல்கருத்துகளை வரவேற்கும் கட்டுரை
அண்டசராசரங்களை படைத்த இறைவன்,பூமி என்ற கோளையும் உண்டாக்கினார்,அதில் மனிதனை உருவக்கி அவனுக்கு துணைவியையும் அளித்து பலுகி பேருகுங்கள் என்றார். அவர் அவனுக்கு அளித்ததோ ஒரே ஒரு பூமி ஆனால் அதை துண்டாடினான் ஐரோபியன்,அமெரிக்கன் இந்தியன்,இத்தியாதி.பின்னும் வெள்ளையன், கருப்பன், இந்தியன். இன்னான் என்று, இந்தியன் தொன்றுதொட்டு மன்னர், குறு நில மன்னர்,என பிரித்து,சுதந்திரம் பெற்ற பின்னும்,உ.பி, ம.பி,வங்கம், கேரளம், ஆந்திரம்,தமிழகம் இப்படியாக மாகாணங்களாக பிரிந்தது. திராவிடம் எனப்படும் இன்றய தென்னகத்தில்,ஆதியில் தம் தொழிலுக்கேற்ப, ஆளுபவன் சத்திரியன்,
என்றும்,வாணிபம் செய்பவன் வணிகன்,தட்டான் கொல்லன், தச்சன், துப்புரவு செய்பவன் என்று,தொழிலில் திறமை கொண்டவனுக்கு அந்தந்த தொழிலின் காரணப் பெயரிட்டான்.
தொழிலில் அதிக கவனம் செலுத்தியதால் தன்னை படைத்த இறைவனை வழிபடும் நேரம் குறைந்ததை கண்டு,வேதங்களை அறிந்து இடைவிடாது இறைவனை வழிபட ஒரு வகுப்பினரை உருவாக்கினான்.அவனே பிராமணன்!.இறைவனை வழிபடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவனை பராமரிக்கும் அவசியத்தை உணர்ந்து, மானியங்கள் அளித்தல், வாழ்கை வசதி செய்தல், இவைகளை இறைவனுக்கே செய்வதாக நினைத்தான்.இவ்வாறுதான் சாதிகள் உருவானதாக நம் மூதாதையர்கள் கூற நான் கேட்டது. இது என் தழ்மையான கருத்தும் கூட.
இறைவன் கொடுத்தொரு பூமியை பிரித்தோம் ஒரேஒரு மனித குலத்தையும் பிரித்தோம் ஏன்?ஒரே இறைவனையும் . பிரித்துக் கொண்டோம்.யூதம்,கிறிஸ்துவம்,முகமதியம்,இந்துத்துவம், எனினும் அதையும் விட்டு வைக்கவில்லை அதிலும்பிரிவுகள்.ஏன் இந்த பிரிவினை?. சமயக் கோட்பாடுகள் மனிதனை நல் வழிப் படுத்தத்தான்,விரும்பியவர்கள் எந்த சமயததை வேண்டுமானாலும் பின்பற்றலாம்,இறைவன் மனிதனுக்கு சுயமாய் செயல்படும் சுதந்திரம் அளித்திருக்கிறார் எல்லா சமயங்களும் நல் வழியைதான் போதிக்கிறது,வழி முறைதான் வித்தியாசப் படுகிறது, .சற்று முன் செய்தியில் பிராமண வகுப்பினர் தங்கள் கொள்கைகளை விட்டு மற்றவர்கலோடு ஒன்றி வாழ முன் வந்துள்ளனர்.சில சமயத்தாரை அவர்கள் ஒதுக்கலாம். காலம் அவர்களை மாற்றும் என்ற நம்பிக்கையில் ஒன்றே குலமென்று கூடுவோம்
Wednesday, May 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பாட்டியம்மாவை நான் ஆமோதிக்கின்றேன்.
நான் ஜாதின்னு போட்டேன். நீங்க சமயம்ன்னு போட்டுட்டீங்க. நான் ஒலுங்கா எழுதல. நீங்க சூப்பரா எழுதிட்டீங்க.
பாட்டி ஒங்களுக்குத் தனி வேண்டுகோள்... ப்ளீஸ் அந்த பிரம்பு கிடைச்சிடுச்சா, கிடைச்சிடுச்சுன்னா தயவு செஞ்சு எடுத்த இடத்திலே வச்சிருங்கோ. கட்டுரை ரெடியாயிட்டிருக்கு.. ;)))))
சரியா சொல்லி இருக்கீங்க அம்மா. மனிதர்களும் மனித நேயமும் தான் முக்கியம் அப்புறம் தான் இந்த ஜாதி எல்லாம்.
செந்தில்,
நகைச் சுவையோடு கூடிய அடி கொடுக்கும் பதிவு உன்னுடையது
தொடர்ந்து எழுது.
உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இதை சொல்ல தேவையில்லை சந்தோஷ் நீங்கள் எல்லோரும் வாழ்ந்து காட்டுகிறீகள்.வளர்க உங்கள் முற்போக்கு
Post a Comment