நாம் பிறருக்கு கொடுப்பதில்,உதவுவதில் பழகிப் போனோமாகில் அது ஒரு மயக்கத்தைக் கொடுக்கும்,அதை ஒருவித addiction என்றே செல்லலாம்.இவ்வாறுதான் நான் அன்றும், இன்றும் இருக்கிறேன்.இதனால் பல இக்கட்டு இடையூறுகளும் உண்டு.இக்கட்டு வரும் நேரங்களில்,இனி இவ்வாறு இருக்கக் கூடாது என்று தீர்மானிப்பேன்.அது சிலமணி நேரங்களில் பறந்து விடும்.செய்ய வேண்டும் என்று நினைக்கும் காரியங்களில்,தீவிரமாக இருப்பேன்.சவால் விட்ட பெண்களே என்னை தனியாகப் போக வேண்டாமென்று தடுத்தார்கள்.பாதிக்கப் பட்ட பெண்கள் அனைவரும் தடுத்தார்கள்.வெகு சிலரே ஒன்றும் கூறவில்லை.ஒரு பெண் என்னிடம் நீ தனியாய் போய் வந்தாய் என்பதற்க்கு என்ன ஆதரம் என்று கேட்டாள்.அவளை மற்ற பென்கள் கோபித்தார்கள்.study hallலைக் கடந்துதான் toiletக்கு செல்ல வேண்டும்.அங்கு பெரிய black board உண்டு.மாணவிகள் பிறந்தநாள் முக்கிய நிகழ்ச்கள்,அதில் எழுதப்படும் அங்கு வர்ண சக்பீஸ்கள் இருக்கும்.நான் அந்த பெண்ணிடம் அங்குள்ள மஞ்சள் நிற சக்பீஸ்சில் +போடுவதாகக் கூறினேன்.
அந்த நேரம் வந்தது மாலை 7.30திலிருந்து 8மணி வரை prayer .அப்பொழுது எல்லோரும் prayer hall லில் இருந்தார்கள்.அன்று எனக்கு உண்மையில் toilet போக வேண்டி இருந்தது, prayer நடுவில் நான் எழும்பியதைப் பார்த்த சில மாணவியின் கண்கள் விரிந்தன ,நான் அவர்களிடம்''v'என்று விரலில் காட்டினேன் (இரட்டை இலை இல்லை) சர்ச்சிலின் விக்ட்ரி காட்டும் குறி toilet சென்றேன்.வந்த வேலை முடிந்தது.நான்கவது toilet கதவில் + குறி போட்டேன் 4 bathroom 6 toilet உணடு,ஒரு தண்ணிர் தொட்டி அதன் விளிம்பில் சில mugs நான் காலில் chappals போட்டிருந்தாலும்,கால் கழுவுவதற்க்கு தண்ணீர் தொட்டியருகில் சென்று தண்ணீர் எடுத்து, சாதித்த மிதப்பில், பேயாவது,பிசாசவது யாருக்கு காது குத்துறார்கள் என்று சத்தமாக கூறிக் கொண்டு,பின்புறமாய் குதிங்காலை கழுவ திரும்பிய பொழுது mug கை வெடுக்கென்று பிடிங்கி தரையில் அடித்தது போல் இருந்தது.யரையும் காணோம்.நாம் தான் அடித்தோமா என்ற ஒரு நிலை.பின் alert ஆகி மற்ற mug கில் தண்ணீர் எடுத்து கழுவ குனிந்த மத்திரத்தில் நான் பார்த்துக் கொண்டே இருக்கும்போழுதே mug ஐ பிடுங்கி எதிர் சுவற்றில் தண்ணீருடன் பளீர் என்று அடித்தது.அதுவரை பயம என்ன என்று அறியாத எனக்கு மனதில் திக் என்ற உணர்வு ஓ இது தான் பயமோ? கடவுளின் நாமத்தைக் கூறிக்கொண்டே வெளியே வந்தேன்.என்னோடு சபதம் செய்த பெண்களும் மற்ற சில பெண்களும் நான் toilet லிருந்து வெளி வருவதையும்,என் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாததை அவர்கள் உணர்தார்கள் போலும்,என்னை அதிசயத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அறைக்குச் செனறேன்,இரவு உணவுக்காக என்னுடன் இருந்த பயிற்ச்சி ஆசிரியர் காத்திருந்தார்.நான் குளிர்த நீரில் கழுவி ஜெபித்த பின் மனம் தெளிவானது.உணவு உட்கொண்டேன். நடந்த உண்மையை யாருடமும் கூற வில்லை.மறு நாள் study hall லில் எல்லோரும் என்னை ஒர் அதிசயத்தை பார்பது போல் பார்த்துக் கொண்டுருந்தார்கள்.மெலிந்த பெண் என்னிடம் உன்னை ஒன்றும் செய்வில்லையா என்று கேட்டாள்,இல்லை என்று தலையாட்டினேன்.நீங்கள் யாரும் தனியே செல்ல வேண்டாம் என்று எச்சரித்தேன். ஒன்று மட்டும் உறுதியாய் உணர்ந்தேன் ,பேய் இருக்கிறது,நான் பாதிக்கப் பட்ட பெண்களிடம் கேட்டுத் தேரிந்தது,பேய் அவர்களை தொடவோ அல்லது தெட்டது போல் உணர்வோ இல்லை ஒவ்வொருவரையும் ஒவ்வோரு விதமாக பயம் காட்டி இருக்கிறது.நம்மை தொடவோ உயிரை எடுக்கவோ கடவுள் அனுமதிப்பதில்லை.அது நம்மை பயம் காட்டுவதால் ஆடு, கோழி வெட்டி அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது போலும்.நம்மை தொட முடியாத பேய்க்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்.ஒரு வருடங்களுக்குப் பின் எனக்கு வயிற்று கோளறு எற்பட்டது.என் தந்தையிடம் doctor,boarding உணவு ஒத்துக் கொள்ளவில்லை கூறியதால் என் தாய் வழி தாதா வீட்டில் என் பள்ளி இறுதி வகுப்பை முடித்தேன்.
நாலைந்து வருடங்களுக்குப் பின், கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த போழுது,என் அத்தை மகள் அதே congregation கன்னிகாஸ்திரி, அந்த boarding school க்கு மாற்றலாகி இருந்திருந்தார்.அவரைக் காண என் குடும்பத்துடன் சென்றிருந்தேன்.நான் என் அத்தை மகளிடம் எனக்கு அறிமுகமானவர்களை பார்க்க விரும்புவதாயும் ,convent சுற்றி பார்கவேண்டும் என்றேன்.என்னை அழைத்துப் போனார்கள்.நான் பேய் toilet காண, அத்தாச்சி இங்கு ஒரு toilet இருந்ததே அது எங்கே?என்றேன்,ஓ அதுவா mother எப்பவோ இடித்து விட்டார்கள். ஏன்?என்றேன்,அது மிகவும் பழசு மேலும் சில பிள்ளைகள் பேய்,பூதம் என்று அரண்டார்கள்,அதனால் இடுத்துப் போட்டாச்சு.அந்த toilet இப்போழுது திறந்த வெளியாய் சூர்யஒளியில் பளீர் என்று காட்சி அளித்தது.ராசமாணிக்கம் அக்கா சொர்கம் சென்றுவிட்டார்கள். துளுக்கி வளர்ந்திருந்தாள். boarding school முழுவதுமாய் மாறிப் போய் இருந்தது.
Tuesday, June 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ஆஹா!!
அப்போ உண்மையாவே பேய் இருந்துச்சுன்னு சொல்ல வரீங்களா??
உலகத்துல நம்மளால புரிஞ்சிக்க முடியாத விஷ்யங்கள் பல உண்டும்!!
இந்த பேய் விஷயமும் அதுல ஒன்னு போல!! :-)
நல்லா போய்ட்ருக்கு பாட்டி!! தொடர்ந்து எழுதுங்க!! :-)
கண்ணு,
வாலிபத்தில இதை எல்லாம் நம்ப மாட்டோம்
விளக்கம் கேட்போம் சிலவற்றை விளக்க முடியாது
அனுபவம் தான் அதை விளங்க வைக்கும்.எனினும்
பேய் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பது உறுதி.
அப்ப பேய் இருக்கிறது உண்மைதானா?இது வரைக்கும் அதை யார் சொல்லியும் நம்பாதவன் நான். நீங்க சொல்லும்போது நம்பணும்னு தோணுது.(இது ஐஸ் எல்லாம் இல்லீங்க).
பேய் பத்தி ஒரு பட்டி மன்றம் நடந்தது. அதில் "பேய் இருக்கிறது" என்பவர்கள் ஒரு குழு, "பேய் இல்லை" என்பவர்கள் ஒரு குழு. சூடான விவாதத்திற்கு க்யாரண்டி.
பேய் இல்லை என்பவர்களில் ஒருவர் : "பேய் இருக்கு இருக்குன்றீங்களே, எங்கே அதி உங்களால இங்கே மேடையேற்ற முடியுமா? அப்புறம் நான் ஒத்துக்குறேன்"
இருக்கிறது என்பவர்களில் ஒரு ஸ்பெஷலிஸ்ட்: "அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் "இதுதான் கடவுள்" என்று கடவுளை மேடையேற்ற பல கட்டுப் பாடுகள் உள்ளன. அதே போல பேயையும் மேடையேற்ற எங்களுக்கும் கட்டுப்பாடுகள்"
மொத்தத்துல பேய் இருக்குதோ இல்லியோ, அதோட பேரைச் சொல்லி மக்களை நம்ப வச்சு ஏமாத்தி பணம் பார்க்குற கூட்டம் நாட்டுல நிறையவே இருக்கு.
செகண்ட் ஹாஃப் செம சூப்பர் பாட்டி. காலத்துக்கு அப்பார்ப் பட்ட நிறைய விஷயங்கள் இந்த உலகத்துல இருக்கு, அதையெல்லாம் அனுபவிச்சாத்தான் புரியும்ன்றதப் புரிஞ்சுக்கிட்டேன். ரொம்ப தேன்க்ஸ் பாட்டி (செகண்ட் ஹாஃபை சீக்கிரம் ரிலீஸ் பண்ணினதுக்கும் சேர்த்து. : ) ) உங்கள்ட்ட இருந்து இந்த மாதிரி அனுபவப் பதிவுகள் நிறைய எதிர்ப் பார்க்கிறேன்.
//உங்கள்ட்ட இருந்து இந்த மாதிரி அனுபவப் பதிவுகள் நிறைய எதிர்ப் பார்க்கிறேன்.//
repeatu!!
//உங்கள்ட்ட இருந்து இந்த மாதிரி அனுபவப் பதிவுகள் நிறைய எதிர்ப் பார்க்கிறேன்.//
cvr,செந்தில்,
நன்றி கண்ணுங்களா.உங்க விருப்பப் படி எழுதுகிறேன்.
பாட்டி அப்ப பேய் உங்களையும் ஒரு கை பார்த்திருச்சா??? சேசே..நான் கூட உங்களை பார்த்து அது பயந்து ஒடிடும்ல நினைச்சேன்..:)
கதை சூப்பரா போகுது ..மூன்றாம் பாகத்திற்கு மீண்டும் வருகிறேன்..
:)
கண்ணு balar,
பேய் நம்மை பயம் தான் கட்டுகிறது ஆனால் அதைவிட கேவலமானவர்களைப் பற்றி
என் அனுபவத்தை எழுதப் போகிறேன்.என் தந்தைக்கு ஏற்ப்பட்ட போய் அனுபவத்தையும்
எழுதப் போகிறேன்..
ஆஹா....
ரொம்ப நாள் ஆச்சே... வந்து தலைய காட்டுவோம் பாத்தா... இப்படி பயம் காட்டிக்கிட்டு இருக்கீங்களே... நியாயமா....
சிவாமா,
நம்மை தொடமுடியாத பேய்யைக் கண்டு பயப்பட வேண்டாமுன்னு தானே சொன்னேன்?
Ahaha paei paei ..Konjam bayama irundhuchungoo padikkum boadhu..En cubicle pakkkathula vandhu nikkudhoonu ..
ராஜிமா,
உங்கள பயப்படுத்த நான் எழுதவில்லை அதைக் கண்டு பயப்பட கூடாது, அது நம்மை ஒன்றும் செய் இயலாது.போயைவிட மோசமான மனிதரிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
May be you (or other readers) can help me.
Recall the series "America azhaikirathu" in a tamil weekly -- around the 1950s?
It was a travelogue/ essays / comments by a teacher --- on her experiences in the US.
Would like to get a hold of the complete serial if compiled and published.
அம்மா,
தங்கள் பதிவுகள் பயனுள்ளவை தரமுள்ளவை நிறைய விடயங்கள் அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றன. மஞ்சள் மகிமைஇன்னும் தொடருங்கள்.
ஒரு சிறு வேண்டுகோள்
நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. கவனத்தில் கொள்ளுங்கள்.
நன்றி.
வேரில்லை = வேறில்லை
போய் = பேய்
அறிது = அரிது..
தங்கள் பதிவுகளில் கண்ணில் பட்டவை.
நன்றி..
Post a Comment