Saturday, June 9, 2007

வாலறிவு

என் அன்பு வலைப்பதிவு பிள்ளைகளே நான் தமிழில் எழுத முடியாத பொழுது உதவிக்கரம் நீட்டிய அன்பு மகன் சந்தோஷ்சுக்கும்,உற்ச்சாக படுத்தி வரவேற்ற அன்பு மகன் நாகை சிவாவிற்க்கும், என்னை அவர்கள் சொந்தமாகவே பாவித்து ஆசையோடு அழைக்கும் அன்பு போராண்டிகள் balar,cvr,செந்திலுக்கும்,போத்திகள் my friend,rajiக்கும்.நான் எழுத கருத்துக்களைத் தந்த அன்பு போராண்டிகள் ஜீ,ACE க்கும்.மற்றும் சியாம்,சிபி,மனசக்கும்,
நகைச் சுவையால் மகிழவைத்த போராண்டி ஜொள்ளுக்கும்.என்னுடைய நொச்சல்ஸ், புடுங்கள்ஸ்க்கு ஈடு கொடுத்து பதிவை பதியச் செய்த என் இனிய இளய மகளுக்கும்,எழுதுங்க அம்மா என்று என்னை இடைவிடாது ஊக்குவித்த என் அருமை முத்த மகளுக்கும்,"ஏதோ எழுதின சரி" எனறு மிக உற்ச்சாகமான வார்த்தைகள் செல்லிய என் ரங்கமணி அவர்களுக்கும், இரண்டு பெக் விஸ்கி அடிச்சலும் உங்களைப்போல் ஆக என்னால் முடியாது அம்மா என்று ஐஸ் வைக்கும் என் அருமை மருமகனுக்கும்,"LAST BUT NOT LEAST",MY PRECIOUS செல்ல குட்டி என் பேத்தி "you are great ammu" என்றுக் கூறி என்னைப் பூரிக்க வைத்தவளுக்கும்.என் உளம் கனிந்த வாழ்த்துக்களும்,நன்றியும் கூறி,தொடர்கிறேன். இலையுதிற் காலத்திற்க்கு வந்துவிட்ட நான், வசந்தத்திலிருக்கும் இளய தலை முறைக்கு சில உண்மைகளைக் கூற விரும்புகிறேன்.

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு"


இந்த தலை முறைக்கு அறிவு அதிகம்,அவர்கள் அனுகுமுறையும் முதிர்தே இருக்கிறது.எதையும் அறிவதில் ஆர்வம்,சாதிப்பதிலும் அதிக உற்ச்சாகமும்,தீவிரமும் காட்டுகிறார்கள்.காட்டாற்று வெள்ளம் போல் அதை விடலாகாது.காட்டாறு வெள்ளம் வரும் நேரங்களில் கரைபுரண்டோடும் மற்ற நேரங்களில் காய்ந்து கிடக்கும்.வற்றாத ஜீவ நதியாய் இருக்க ,மூத்த தலை முறையின் அறிஉரை அவசியம்.காலத்திற்கேற்றவாறு மூத்த தலை முறையும் மாறித்தான் ஆகவேண்டும். பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை என்றேகூறலாம்.அளவுகள் தான் வித்தியாசப் படும். ஒவ்வொரு மனிதனுக்கும் சிங்க பார்வை வேண்டும்.அதென்ன சிங்கப்பார்வை?சிங்கமானது தன் பேடை,குட்டிக்கு முன் செல்லும்,சிறிது தூரம் சென்ற பின்,அவற்றின் பின் நின்று தான் வந்த திசையை நோக்கிப் பார்க்கும்.பின்னர் பேடை,குட்டிக்கு முன் செல்லும்.எதிரிகளை முன் நோக்கிப் பார்க்கும் சிங்கம் பின் நின்று பின்னால் எதிரி வருகிறதா?என்று பார்பதுதான் சிங்கப்பார்வை.ஒவ்வொரு மனிதனும் பிரச்சனையை சமாளிக்க வேண்டும்,அந்த பிரச்சனையை எப்படி சமாளித்தோம் இன்னும் நல்ல முறையில் எப்படி சமாளிப்பது எனறு சிந்திக்க வேண்டும் பின் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது எளிதாகிவிடும்

ஒருவன் தன திறமையால் உயர்ந்த வழிகளை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தயங்குவான்,ஏன் என்றால் தன முன்னேற்றத்துக்கு மற்றவன் தடையாகி விடுவானோ என்ற பயம்.இது முற்றிலும் யதார்தமானது.ஆனால் ஒருவன் கடவுளை அறிந்த மாத்திரத்தில் அவன் சும்மா இருக்க இயலாது.அவன் பெற்ற தெளிந்த இன்பத்தையும்,பலனையும் பிறரிடம் கூற தயங்கமாட்டான். ஏன்?முன்னது தனி மனிதனின் சுயநலத்தை சார்ந்தது,ஆனால் தெய்வத்திடம் சுயநலமில்லை,அவர் நல்லோருக்கும், தீயோருக்கும், அறிவாளிக்கும், அறிவிளிக்கும் தெய்வமவர்.எனவே கடவுளை அறிந்தவன் சுயநலமற்று தான் பெற்ற தெளிந்த இன்பத்தையும், பயனையும் பிறர் அடைய விரும்புவான்.அறிவு என்பது உலகத்தைச் சார்ந்தது ,ஞானம் என்பது கடவுளைச் சார்ந்தது.கடவுளைப் பற்றிய பயமே ஞானத்தின் ஆரம்பம். கடவுளிடம் நாம் கொண்டிருக்கும் பயம் உலக பயம் போல் இல்லை.அது அவரின் அனபை விட்டு விலகி விடுவோமோ என்ற பயம்.ஞானமுள்ளவன் பெரிய குற்றங்கள் எதையும் செய்ய மாட்டான்,சிறிய குற்றம் செய்யாத மனிதர்கள் இல்லை என்றே கூறலாம்,அது மனித குலத்திற்க்கே உள்ள குறைபாடு., சிறிய குற்றத்திலிருந்து தன்னை திருத்திக் கொள்ளவும், பெரிய குற்றங்கள் அனுகாமல் இருக்கவும்தான் ஞானம் தேவைப்படுகிறது.ஞானத்தை வளர்த்துக் கொண்டவன் பேய், பிசாசு,பிரச்சனை,இயற்கை சீற்றம் கண்டு பயப்படான்.அவனிடமுள்ள ஞானம் அவனை முன் எச்சரிக்கை செய்யும்.எனவே கடவுளிடம் அன்பு கொண்டவன் எதற்கும் அஞ்சான்.நான் எந்த சமயத்தைப் பற்றி கூற வில்லை,அண்ட சராசரங்களையும் அடக்கி ஆள்பவரைத்தான் கூறுகிறேன்.இளகிய மனம் படைத்த பெண்கள் எனறால் இயற்கை என்று கொள்வார்கள், ஆனால் இளகிய மனம படைத்த ஆண்கள் என்றால் கோழை என்று கூறுவது முற்றிலும் தவறு.இளகிய மனம் என்பது அன்பின் அடிப்படையில் வருவது.அன்பே கடவுள். உண்மை அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.

அறத்திற்கே அனபுசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துனை

எனவே வீரத்திற்கும் அதுவே துனையாய் இருக்கிறது.அது மட்டுமல்ல,ஒருவனிடம் நிறைவான அன்பு இருக்கும் பொழுது பிறருக்காக மனம் கசிவதைத்தான்

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்

என்றார் எனவே அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்று மீண்டும் கூறுகிறார்.அன்பு கொண்டோர்க்கு பயமில்லை,பகைமையில்லை,நல்ல நட்பு உண்டு."Birds of a feather flock together"என்பதற்கேற்ப அன்புள்ளம் கொண்டோர் ஒன்று கூடுவர்.சிறிதளவே ஞானம் இருந்தாலும்.பிரச்சனை வரு முன் எச்சரிக்கை செய்யப் படுவதை என் அனுபவத்தில் உணர்ததை வரும் பதிவில் கூறுகிறேன்.

பி.கு.இந்த பதிவின் கருத்தை எற்றுக்கொள்பவர்கள் மட்டுமின்றி மறுப்பவர்களும் தங்கள் பின்னுட்டு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திருத்திக் கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்.

22 comments:

Dhavappudhalvan said...

இணைய தொடர்பு சுமார் மூன்று வருடங்களாகத்தான்.அதுவும் விளையாடவும், EMail Farword செய்வதற்கு மட்டுமே. தமிழில் படிக்கவும்,எழுதவும் வழித்தெரியாமல்,5 மாதங்களுக்கு முன்பு வரை. முதல் தமிழில் படிக்க அறிமுகமானது'நிலாசாரல்.காம்' இணையதளம். பிறகு என் கருத்துக்களை எழுத வாய்ப்பு 'கம்போஸ்தமிழ்.காம்'அறிமுகமானது. சென்ற 2 மாதங்களாகத்தான்
Blogs அறிமுகமானதிலிருந்து, தினமும் புதிது Blogs அறிமுகம் என்னை மலைக்க வைக்கிறது. நெரம் கிடைக்கும் போது எமது blog ஐயும் பார்வையிடவும்

CVR said...

//சிறிதளவே ஞானம் இருந்தாலும்.பிரச்சனை வரு முன் எச்சரிக்கை செய்யப் படுவதை என் அனுபவத்தில் உணர்ததை வரும் பதிவில் கூறுகிறேன்.
//
நல்ல ஐடியா பாட்டி!!
"மூற்றோர் வார்த்தை முற்றிய நெல்லிக்கனி" என சொல்லக்கேட்டிருக்கிறேன்.
உங்கள் அனுபவங்களை பற்றிய பதிவுகள் எங்கள் வாழ்க்கையில் யோசிப்பதற்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன்!!
வாழ்த்துக்கள்!! :-)

ulagam sutrum valibi said...

கண்ணு,
வாலறிவு என்பது தூமையான அறிவு என்று அர்த்தமாகும்.கடவுளைப் பற்றி அறியும் அறிவு துய்மைதானே?யாரை அவர் முன் குறித்தாரோ அவர்களே அவரை தேடிகண்டடைவார்கள

ulagam sutrum valibi said...

dhavapputhalvan,
உங்கற் வருகைக்கு நன்றி.உங்ககள் பதிவை பார்கிறேன்.

நாகை சிவா said...

நம்ம பெயரையும் போட்டு பெருமைப்படுத்தி வீட்டீர்கள்....

//எதையும் அறிவதில் ஆர்வம்,சாதிப்பதிலும் அதிக உற்ச்சாகமும்,தீவிரமும் காட்டுகிறார்கள்//

இதற்கு உங்களை போன்றோர்களின் ஊக்கமும் ஒரு காரணம். என் பதிவில் ஒரு தடவை சில திருக்குறளை உதாரணம் காட்டி இருந்தீங்க பாருங்க... ரொம்ப நெகிழ வைத்தது அது...

நாகை சிவா said...

//ஒவ்வொரு மனிதனும் பிரச்சனையை சமாளிக்க வேண்டும்,அந்த பிரச்சனையை எப்படி சமாளித்தோம் இன்னும் நல்ல முறையில் எப்படி சமாளிப்பது எனறு சிந்திக்க வேண்டும் பின் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது எளிதாகிவிடும்//

நச்.........

ulagam sutrum valibi said...

அன்பு மகன் நாகை சிவம்,
நான் உண்மையைத் தான் கூறி உள்ளேன்,என் முதல் பதிவின் பின்னுட்டத்தில் என்னை நீங்கள் எவ்வாறு ஊக்குவித்தீர்கள் என்று தெரியும்.

களவாணி said...

முதல்ல அட்டன்டன்ஸ் போட்டாச்சு.

//ஒருவன் தன திறமையால் உயர்ந்த வழிகளை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தயங்குவான்,ஏன் என்றால் தன முன்னேற்றத்துக்கு மற்றவன் தடையாகி விடுவானோ என்ற பயம்.இது முற்றிலும் யதார்தமானது.//

கரெக்ட்டாச் சொன்னீங்க பாட்டி...

களவாணி said...

//ஆனால் ஒருவன் கடவுளை அறிந்த மாத்திரத்தில் அவன் சும்மா இருக்க இயலாது.அவன் பெற்ற தெளிந்த இன்பத்தையும்,பலனையும் பிறரிடம் கூற தயங்கமாட்டான்//

கடவுளை அறிந்தவன் சுயநலமுள்ளவனாக இருக்க முடியாது. சுய நலமுள்ளவனால் கடவுளை அறிய முடியாது. இல்லையா பாட்டி. (ஒரே விஷயத்தை மாத்தி மாத்தி சொன்னா அதான் பஞ்ச் டயலாக்கா?)

களவாணி said...

//பி.கு.இந்த பதிவின் கருத்தை எற்றுக்கொள்பவர்கள் மட்டுமின்றி மறுப்பவர்களும் தங்கள் பின்னுட்டு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திருத்திக் கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்.//

முற்றோர் சொல்லை யார்தான் ஏற்றுவர்.

களவாணி said...

//காலத்திற்கேற்றவாறு மூத்த தலை முறையும் மாறித்தான் ஆகவேண்டும்.//

ஆ. இப்படி நம்ம வழிக்கு வாங்க.

களவாணி said...

இப்போ லேட்டா வந்ததுக்கு அப்பாலஜி, அம்மாலஜி, பாட்டியாலஜி. இதுல உங்களுக்கு மூனாவது உங்களுக்கு,

மிஸ்... மிஸ்... ஸாரி மிஸ், ஆபிஸ்ல அந்த மானேஜர் தேவையில்லாதது மட்டுமில்லாம தேவையான ஆணியக் கூட புடுங்க சொல்றாரு மிஸ். அதான் மிஸ் க்ளாஸை அட்டன்ட் பண்ணிட்டு அட்டன்டன்ஸ் போட லேட் ஆகிடுச்சு.

களவாணி said...

//கண்ணு,
நீயும் மகளீர் அணிக்கு என் கழகத்தை கூட்டணியா சேத்துக்குவேன்னு இடிவிடேஷன் எதிர் பாத்தா,பேச்சு மூச்சைக் காணாம்.என்னா செய்தி நல்லா இருக்கியா?//

ஆஹா என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க. உங்க ஜி-மெயில் ஐ.டி. இல்லாதாலதான் நான் உங்களுக்கு இன்விடேஷன் அனுப்பல. உங்க மயில் ச்சீ... மெயில் ஐ.டி.யைக் கொடுங்க, அடுத்த நாளே உங்க இன்பாக்ஸ் வாசல்ல நம்ம இன்விடேஷன். ஆர்வத்திற்கு நன்றி... அப்புறம் இன்னொரு விஷயம் பேராண்டி கிட்ட இப்படி க,கா,கி,கீ ல்லாம் விடப் பிடாது. ஒன்லி டூ, த்ரீ, ஃபோர்தான் விடணும்.:-)

வெயிடிங் ஃபார் யுவர் ரிப்ளை வித் மெயில் ஐ.டி.

யுவர்ஸ் ஒபெடியன்ட்லி,

ஸாரி, ச்சே இந்த லீவ் லெட்டர் எழுதற பழக்கம் எப்பதான் போகுமோ. :(

ulagam sutrum valibi said...

கண்ணு,
இப்பதான் சபை கலகலப்பா இருக்கு.நம்ம மவனுவ,பேராண்டிங்க வந்து அட்டன்டன்ஸ் போட்டா பாட்டி குஷி ஆயிடுவேன்.
//தன முன்னேற்றத்துக்கு மற்றவன் தடையாகி விடுவானோ என்ற பயம்.இது முற்றிலும் யதார்தமானது.//

சொந்த அனுபவம் கண்ணு, சொல்லிக் கொடுத்தேன் நம்பள தட்டிட்டு, போயிட்டாங்க ஆனா பாரு இப்பகூட நம்ம கிட்ட சிலது பேப்பாங்க,சொல்லி கொடுப்பேன் தட்டிடு போவாங்க நமக்கு புத்தி வராது.அதுதான் புத்தி உள்ள இளசுகளுக்கு சொல்லுறேன்.

ulagam sutrum valibi said...

//ஒரே விஷயத்தை மாத்தி மாத்தி சொன்னா அதான் பஞ்ச் டயலாக்கா?)//
நக்கலு,நம்மகைல அதேல்லாம் கிடயாது செதறு தேங்கதான்

ulagam sutrum valibi said...

//ஆ. இப்படி நம்ம வழிக்கு வாங்க//
வேற வழி, வந்துதானே ஆகனும்.

ulagam sutrum valibi said...

//மிஸ்... மிஸ்... ஸாரி மிஸ், ஆபிஸ்ல அந்த மானேஜர் தேவையில்லாதது மட்டுமில்லாம தேவையான ஆணியக் கூட புடுங்க சொல்றாரு மிஸ். அதான் மிஸ் க்ளாஸை அட்டன்ட் பண்ணிட்டு அட்டன்டன்ஸ் போட லேட் ஆகிடுச்சு//

எங்கே அந்த பெரம்பு பத்தரமா இருக்கா?

ulagam sutrum valibi said...

//பேராண்டி கிட்ட இப்படி க,கா,கி,கீ ல்லாம் விடப் பிடாது. ஒன்லி டூ, த்ரீ, ஃபோர்தான் விடணும்.:-)//

ஒன் டு திரி....அங்கே!!! போய்பார் உன் பதிவில்....!!

சமைக்க போறேன் பை பை.

Raji said...

Paati superaa pathivu podureenga..pirkalaathula engalukku udhaviya irukkum...
Super paati neenga :-)

ulagam sutrum valibi said...

ராஜிமா,
உன வருகைக்கு மகிழ்ச்சி.
//Paati superaa pathivu podureenga..pirkalaathula engalukku udhaviya irukkum...
Super paati neenga//
கேட்க ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருக்குடா.

balar said...

பாட்டி பேராண்டியின் பணிவான வணக்கங்கள்..
உங்களின் அனுபவ பதிவுகளும் அறிவுரை பதிவுகளும் எங்களுக்கு எப்பொழ்தும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்..தொடர்ந்து எழுதுங்கள்..:)

ulagam sutrum valibi said...

கண்ணு balar,
உங்களைப் போன்ற பேராண்டிகள், பேத்திகள் ஊக்கப் படுத்துவதால் தான், எனக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.உங்கள் அணைவரின் துண்டுதலுக்கு மிகமிக நன்றி.