Thursday, May 31, 2007

Mood Out!!

என் புது template டைப் பற்றியும், ஜி கேட்டுக் கொண்டதால் பேய் பதிவு போட இருந்தேன். கப்பியின் பதிவில் நண்பனின் முடிவு மனவருத்ததை அளித்தது.சிவபாலன் பதிவில் படித்த முட்டாள்கள் இளங்ஞனைக் கொடுமைப் படுத்துவதைப் பார்த்து என்னுடைய இயலாமை இந்த மனித உரிமைஎன்ன செய்கிரது என்ற கோபம். இதில்கொடுமை என்னவென்றால் நீதி மன்ற வளாகத்தில் இது நடந்திருக்கிறது.இதனால் தான் மூடு அவுட்.!!!

Tuesday, May 29, 2007

அறிவிப்பு

அன்பு பதிவாளர்களுக்கு,எங்கள் குடும்பங்களில்
தாய் வழிப் பாட்டியை அம்முமா என்று அழைப்பது
வழக்கம்,என் போத்தி குழந்தையாய் இருந்ந நேரம்
அம்மு என்று அழைத்தாள்,அதுவே வழங்கிவந்தது
அனனானிமஸ்ல் அம்மு என்று பின்னுட்டு எழுதுபவர்
நான் அல்ல.மீண்டும் கூறுகிறேன் அவர் நான் அல்ல

Wednesday, May 23, 2007

ஒன்றே குலமென்று கூடுவோம்

சற்று முன் செய்தியில் 15மே பிராமணர் எடுத்த நல்ல்கருத்துகளை வரவேற்கும் கட்டுரை

அண்டசராசரங்களை படைத்த இறைவன்,பூமி என்ற கோளையும் உண்டாக்கினார்,அதில் மனிதனை உருவக்கி அவனுக்கு துணைவியையும் அளித்து பலுகி பேருகுங்கள் என்றார். அவர் அவனுக்கு அளித்ததோ ஒரே ஒரு பூமி ஆனால் அதை துண்டாடினான் ஐரோபியன்,அமெரிக்கன் இந்தியன்,இத்தியாதி.பின்னும் வெள்ளையன், கருப்பன், இந்தியன். இன்னான் என்று, இந்தியன் தொன்றுதொட்டு மன்னர், குறு நில மன்னர்,என பிரித்து,சுதந்திரம் பெற்ற பின்னும்,உ.பி, ம.பி,வங்கம், கேரளம், ஆந்திரம்,தமிழகம் இப்படியாக மாகாணங்களாக பிரிந்தது. திராவிடம் எனப்படும் இன்றய தென்னகத்தில்,ஆதியில் தம் தொழிலுக்கேற்ப, ஆளுபவன் சத்திரியன்,
என்றும்,வாணிபம் செய்பவன் வணிகன்,தட்டான் கொல்லன், தச்சன், துப்புரவு செய்பவன் என்று,தொழிலில் திறமை கொண்டவனுக்கு அந்தந்த தொழிலின் காரணப் பெயரிட்டான்.
தொழிலில் அதிக கவனம் செலுத்தியதால் தன்னை படைத்த இறைவனை வழிபடும் நேரம் குறைந்ததை கண்டு,வேதங்களை அறிந்து இடைவிடாது இறைவனை வழிபட ஒரு வகுப்பினரை உருவாக்கினான்.அவனே பிராமணன்!.இறைவனை வழிபடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவனை பராமரிக்கும் அவசியத்தை உணர்ந்து, மானியங்கள் அளித்தல், வாழ்கை வசதி செய்தல், இவைகளை இறைவனுக்கே செய்வதாக நினைத்தான்.இவ்வாறுதான் சாதிகள் உருவானதாக நம் மூதாதையர்கள் கூற நான் கேட்டது. இது என் தழ்மையான கருத்தும் கூட.


இறைவன் கொடுத்தொரு பூமியை பிரித்தோம் ஒரேஒரு மனித குலத்தையும் பிரித்தோம் ஏன்?ஒரே இறைவனையும் . பிரித்துக் கொண்டோம்.யூதம்,கிறிஸ்துவம்,முகமதியம்,இந்துத்துவம், எனினும் அதையும் விட்டு வைக்கவில்லை அதிலும்பிரிவுகள்.ஏன் இந்த பிரிவினை?. சமயக் கோட்பாடுகள் மனிதனை நல் வழிப் படுத்தத்தான்,விரும்பியவர்கள் எந்த சமயததை வேண்டுமானாலும் பின்பற்றலாம்,இறைவன் மனிதனுக்கு சுயமாய் செயல்படும் சுதந்திரம் அளித்திருக்கிறார் எல்லா சமயங்களும் நல் வழியைதான் போதிக்கிறது,வழி முறைதான் வித்தியாசப் படுகிறது, .சற்று முன் செய்தியில் பிராமண வகுப்பினர் தங்கள் கொள்கைகளை விட்டு மற்றவர்கலோடு ஒன்றி வாழ முன் வந்துள்ளனர்.சில சமயத்தாரை அவர்கள் ஒதுக்கலாம். காலம் அவர்களை மாற்றும் என்ற நம்பிக்கையில் ஒன்றே குலமென்று கூடுவோம்

Wednesday, May 2, 2007

தாக்கம்

வலைப்பதிவாலர்களோடு என் தாக்கத்தை பகிர்து கொள்ள விரும்புகிறேன். வெயில் மழை,நோடிஸ் போடு பதிவுக்கு சென்றிருந்தேன். நோடிஸ் போடு கண்டதும் இளமை ஊஞ்சலாடியது,ஆனால் இறுதியாய் இரண்டில் முதல் போசும் நிழல்படத்தை கண்டதும் எனக்கேற்பட்ட தாக்கம் புதிதல்ல, சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு,என் பேத்தி கைகுழந்தையாய் இருந்த சமயம் தள்ளுவண்டில் வைத்து சுற்றுவது எனக்கு விருப்பமானது ஒன்றாகும். என் வழ்கையில் பெரிதாய் சாதித்ததுபோல் ஓர் உணர்வு.

ஒரு தினம் அவ்வாறு நான்செல்லும்போது தடையின்றிக் கடக்கும் வழியில் கடக்க அறியாது நான் தடுமாறும் வேளை ஓர் இளைஞன் என்னை கைபிடித்தழைத்து கடக்கச் செய்தான்.தடையின்றி கடக்கும் தடயத்தை பற்றி ஆங்கிலத்தில் விளக்கினான்.நானும் என் அறியாமையை ஏற்று நன்றி கூறினேன் பனி காலங்களில் பனி உடுப்பு உடுத்தி சித்தானையாய் சுற்றிம் நான கோடையானதால் சீலை உடுத்தி இருந்ததைக் கண்டு நீங்கள் இந்தியரா? என்று வினவ,ஆம் தமிழச்சி என்றேன்.ஒரு வித சோகத்தோடு இருந்த அவன் முகம் வினாடியில் ஒளிர்ந்து மறைந்து.அந்த உணர்வைக் கண்ட நான் அவனோடு உரையாட தீர்மானித்தேன்
சாலையோர இருக்கையில் அவனை அழைத்து அமர்தேன்.நீயும் தமிழன் தானே?உன் ஊர் எது என்று கேட்க ,எனகென்று ஒரு தாயகம் இருந்தது, இப்போதில்லை என்றான்.அவன் ஓர் இலங்கை தமிழன் என்றும் ,அங்கு அவன் சுற்றம் பட்ட வேதனையும்,அவன் கண்முன் அவன் சகோதரி.....எழுத கூசும்,,மனம் பதறும் இகழ்ச்சியை நான் இங்கு சொல்லவேண்டியதில்லை. என் கண்ணீரில் அவன் உருவம் மறைந்தது ,அவனுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்தைகள் இல்லை.குலுங்கி குலுங்கி அழுத என்னையும் அவன் தேற்றினான்.என்னை பார்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று வினவினான் ஒரு சாந்தமான மகனாய் தோன்றுகிறாய் என்றேன்.அம்மா நான் ஒரு விடுதலை புலி .என் உயிர் எனக்கல்ல என் மண்ணுக்கே என்றான்.ஓ...இவ்வாறுதான் தீவிரவாதீ உருவாகிறானா??என்ற சந்தேகம் என்னுள் வந்தது.என் சந்தேகத்தை புரிந்தவன் போல் எல்லா தீவிரவாதீயும் என்னை போல்லல்வென்று கூறி ஓர் உணர்ச்சியற்ற புன்னகை புரிந்தான்.அவனோடு இருந்த அந்த மணிதுளிகளில் இருந்த என் உணர்வு என்ன?என்று எனக்கு புரியவில்லை.அநீதியைகண்டு பதரினேனா?வெறுத்தேனா?தாய் அன்பால் உறுகினேனா,புரியவில்லை.அந்த தாக்கம் சில மாதங்கள் என் மனதில் நீடித்தது லண்டன் செல்லும் வேளைகளில் வீதிகளில் இன்னமும் என் கண்கள்அவனை..... தேடுகிறது