Wednesday, July 25, 2007

மஞ்சள் மகிமை

மஞ்சள் மங்களகரமான பொருள்.இறைவன் அளித்த அற்ப்புத முலிகை என்று கூறினால் அது மிகையாகாது.எந்த ஒரு மங்கள நிகழ்ச்சிக்கும் முதலிடம் பெறுவது மஞ்சள்.தங்கத் தாலி இல்லா வரிய மகளிர் மஞ்சள் தாலி அணிவதும் உண்டு.ஏன் இதற்க்கு இத்தனை பெருமை.
திருமண நிகழ்ச்சியில் மஞ்சள்,விழாக்களில் மஞ்சள்,காயப்பட்டால் மஞ்சள்,கதவு நிலைப் படியில் மஞ்சள்,உணவில் மஞ்சள்,புது உடையில் மஞ்சள்.மஞ்சள் நம் வாழ்வின் அங்கமாகவே திகழ்கிறது.இது இறைவன் நமக்கு அளித்த அறிய முலிகை என்று முன்பே கூறிவிட்டேன்.மஞ்சளைப் பற்றிய குறிப்புக்களையும் அதன் உணவு சத்தின் விகிதத்தையும் நம் கலாச்சாரத்துடன் எவ்விதமாய் கலந்துள்ளது என பலவற்றை நான் சேகரித்து பதிவாக இட இருந்தேன்.24ம் தேதி தினமலர் வெளியிட்டில் அமெரிக்கா லாஸ்அஞ்சல்லிஸ் நகரத்தில் உள்ள அல்சைமர்ஸ் நோய் ஆராய்ச்சி மையத்தில் செயலாற்றும் டாக்டர் மிலன் பாய்லாவின் கண்டுபிடிப்பில்,எதிற்ப்பு சக்தி குறையும் போது நினைவாற்றல் நரம்புகளைப் பாதிப்பது அமிலாய்டு எனப்படும் ஒரு வகை ரசாயனப் பூச்சாகும்.எவ்வகை மருந்தினாலும் இதை எடுக்க முடிவதில்லை.இதை நீக்க உதவும் ரசாயனம் நம் சமையல் (கறிமஞ்சள்) மஞ்சளில் உள்ளது.எனவே மஞ்சளை உணவில் சேர்க்க கூறுகிறார்கள்.நம் சமையலில் மஞ்சள் சேர்க்காத கறி, குழம்பு வகையே இல்லை என்று கூறலாம்.வரும் பதிவில் மஞ்சளின் சத்து விகிதம்,நம்மவர் எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்துகிறோம் என்பதை என்பதை விரிவாக கூறுகிறேன்.கிழ் வரும் செய்தி TheSpiceBarn.com

thanks to TheSpiceBarn.com for the following information:
quote:

Turmeric is one of the key ingredients in curries as well as prepared mustards, giving them color and flavor.

With it's rich distinctive yellow colour and flavor, Indian turmeric is considered the best in the world. India is the largest exporter of turmeric to countries like Canada,Middle East,UK,USA and Japan. Turmeric has been cultivated in India for more than 2000 years.

Besides it's culinary gifts, Turmeric is also used to dye cloth.
unquote:

15 comments:

CVR said...

மிக உபயோகமான தகவல் பாட்டி!!!
பதிவிட்டதற்கு நன்றி!! ;-)

ulagam sutrum valibi said...

கண்ணு,
மற்றவர்களுக்கு உபயோகமாக இருப்பது குறித்து மகிழ்ச்சியாய் இருக்கு.பல குறிப்புகள் சேகரித்துள்ளேன் விரைவில் எழுதுகிறேன்

ஜொள்ளுப்பாண்டி said...
This comment has been removed by the author.
ஜொள்ளுப்பாண்டி said...

அக்கா வாலிபியக்கா :))) கொஞ்ச நாளா ரொம்ப வேலை பெண்டு நிமித்தீட்டாங்க எங்க ஆபீஸிலே. அதனால பதிவே எழுதாம இருந்தேன். அந்த சமயத்திலேதேன் நீங்க 8 போட கூப்டியளா என்னால எழுத முடியலை. தயவு செஞ்சு கோச்சுக்காதீங்க !! :))))

ulagam sutrum valibi said...

பாண்டி கண்ணு,
வேலைதான் முக்கியம் பதிவெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்.
அதென்ன அக்கா பாட்டின்னு கூப்பிடு வேனுனா வாலிபி பாட்டின்னு கூப்பிடு.

ulagam sutrum valibi said...

மகிழ்ச்சியுடன் வணக்கம் வேதாமா,
உன் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.அடுக்களையில் அறிய மருந்துகள்.அஞ்சரை பெட்டியில் அழகு சாதனம் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட எழுதிக் கொண்டிருக்கிறேன்.அது மட்டுமல்ல நாம் அன்றட உண்ணும் உணவில் உதாரணமாக இட்டிலி,சாம்பார்,கறி (சைவ உணவு) வகையில் உள்ள சத்துகள்,சத்தின் விகித அளவு இவற்றை அறிய அந்தெந்த துரையில் தொடர்பு கொண்டு சேகரித்து வருகிறேன் நடு நடுவில் குடும்ப பொறுப்பு இவற்றால் தாமதப்படுகிறது இறைவன் சித்தத்தோடு விரைவில் எழுத ஆசிக்கிறேன்.உங்களைப் போல் ஆர்வம் உள்ள அன்புள்ளங்கள் தேவை.(I have also studied cosmetology)

Dreamzz said...

மஞ்சள் மகிமை பற்றி சொன்னமைக்கு நன்றி!

Dreamzz said...

///எதிற்ப்பு சக்தி குறையும் போது நினைவாற்றல் நரம்புகளைப் பாதிப்பது அமிலாய்டு எனப்படும் ஒரு வகை ரசாயனப் பூச்சாகும்.எவ்வகை மருந்தினாலும் இதை எடுக்க முடிவதில்லை.இதை நீக்க உதவும் ரசாயனம் நம் சமையல் (கறிமஞ்சள்) மஞ்சளில் உள்ளது.//

Wow. it was sure informational!

ulagam sutrum valibi said...

கண்ணு dreamzz.
நீங்கள் எல்லோரும் கொடுக்கும் உற்ச்சாகம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

balar said...

நல்ல பயனுள்ள தகவல் பாட்டி..
எனக்கோ இல்லை எனது சகோதரிக்கோ இருமல் வந்தால் எனது அன்னை காய்ச்சிய பாலில் மஞ்சள் தூள் தான் போட்டு தருவார்..நல்ல பயன் கிட்டும்.

தாங்கள் கூறியது போல் "மஞ்சள்" மங்களகரமான பொருள் மட்டும் அல்ல, நல்ல மருத்துவ பொருளும் கூட..

ulagam sutrum valibi said...

கண்ணு balar,
உன் வரவுக்கு மிக்க மகிழ்ச்சி.
அம்மாவிடம் கேட்டீர்களானால் மஞ்சளைப்பற்றி நிறைய கூறுவார்கள்.

களவாணி said...

பாட்டி எட்டு போட்டாச்சு. தாவு தீந்துடுச்சு. வந்து பார்த்துட்டு ஏதாச்சும் சொல்லி வைங்க...:)

ulagam sutrum valibi said...

கண்ணு,
பயணத்தினால் தாமதம்
பார்த்துவிட்டேன்.என் கோரிக்கையை ஏற்றதற்க்கு மிக்க மகிழ்ச்சி.

Anonymous said...

aaha mangalakaramana post la naa 1st comment podaren!!

Anonymous said...

//அடுக்களையில் அறிய மருந்துகள்.அஞ்சரை பெட்டியில் அழகு சாதனம் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட எழுதிக் கொண்டிருக்கிறேன்.//

akka, enaku oru copy :)